மண்ணில் வந்த நோக்கம் தனையவள் எண்ணம் என்றும் பதித்தாள் ஆதலின் ஒத்திணை(வு)அற்றே ஒதுங்கி வாழ்ந்தாள், உலகம் அளாவிய உணர்வில் கனிந்தவள் உளத்தால் உலகோர்க்(கு) உறவாய்ப் பொலிந்தாள், எவரும் பாகம் ஏற்கா(து) இருக்கவே தன்னந் தனியே தான்முன் […]
இந்தப் பொழுதிலும் இன்னல் உற்றுப் போரா டியதே அவளது புற்கலன்; ஏற்ற அவளின் மானிட இயல்பும் பாதி இறைமைப் பாங்காய் இருந்தது: அனைவரில் இருக்கும் புனித ஆன்மா அவளின் அகத்துரு வாகத் தெரிந்தது, இயற்கை ஆற்றல் […]
எனிது எனிலோ, இயற்கை அன்னை தன்னின் வல்லமைத் தடத்தில் நடக்கையில் உயிர்ப்பொருள் ஒன்றின் உரத்தை முறிக்கிறாள், ஆன்மா ஒன்றின் ஆக்கம் தகர்க்கிறாள், ஆயினும் அதற்கெலாம் கவலை கொளாதே அழிந்து பட்டவை அவணே தங்கியும் பாதிப்(பு) இன்றிப் […]
பலநாள் முன்னர் அறியப் பட்டதும் ஊழ்வழி வகுத்ததால் உற்றதும் ஆகிய புலரும் இந்தக் காலைப் பொழுதோ நாளும் தெரிகிற நண்பகல் போன்று மற்றொரு பகலைக் கொணர்ந்து வந்ததே – ஸ்ரீ அரவிந்தர்