May 5, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

கடவுளின் நாடக அரங்கென இவ்வுலகை ஏற் றுக்கொள். நாடக நாயகனாம் இறைவனின் முகமூ டியாக நீ இரு, உன்னூடே அவனை இயங்கவிடு. மனிதர் உன்னைப் புகழும்போது அல்லது இகழும் போது, அவர்களும் முகமூடிகளே என்பதை உணர். […]
May 4, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

உன்னை இறைவன் தன் உடைமையாக ஆட் கொண்டிருப்பது, நீ மனிதரின் பாராட்டுதல்களைத் இரட்ட வேண்டும் என்பதற்காக அன்று; இறைவ னின் ஆணையை நீ அச்சமின்றி நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே. – ஸ்ரீ அரவிந்தர்
May 3, 2024

சிந்தனைப் பொறிகள்

மனிதர் தீயதெனக் கூறுவதையெல்லாம் தீய தென்னாதே; இறைவன் ஒதுக்குபவற்றை மட்டுமே நீ ஒதுக்கு. மனிதர் நல்லதெனக் கூறுவதையெல்லாம் நல்லதென்னாதே; இறைவன் ஏற்பவற்றை மட்டுமே நீ ஏற்றுக்கொள். – ஸ்ரீ அரவிந்தர்
May 2, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

உன்னைத் தூய்மையாக்கும் பொறுப்பை நீ சுடவுளிடம் ஒப்படைத்தால், அவர் உன்னிடமிருக் கும் தீயவற்றை உள்ளிருந்தே ஆனால் உன்னை நீயே வழிநடத்த அகற்றிவிடுவார். வேண்டுமென்று தீ வற்புறுத்துவாயெனில், நீ புறத்தே மிகுதியான பாவத்திலும் துன்பத்திலும் வீழ்ந்து தவிப்பாய். […]
May 1, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

அகத்தே உன்னை நீயே சோதனைக்கு உட் படுத்து, அந்தப் போராட்டத்தால் உன் கீழ்நோக்கிய உந்துதல்களைத் தீர்த்துவிடு. – ஸ்ரீ அரவிந்தர்
April 30, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

மனிதரைச் சோதிப்பதென்னும் சுமையைக் கட வுள் தம்மீது ஏற்றுக்கொண்டிராவிடில், இவ்வுலகம் வெகு விரைவில் அழிந்துபோயிருக்கும். – ஸ்ரீ அரவிந்தர்
April 27, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

தீயவற்றின் கவர்ச்சியைக் காட்டிச் சோதிக்கும் போதுதான் கடவுள் மிக நன்றாக வழிநடத்துகிறார். கடுமையாகத் தண்டிக்கும்போதுதான் முழுமையாக அன்புசெலுத்துகிறார்; தீவிரமாக எதிர்க்கும்போது தான் மிகச் சிறந்த முறையில் உதவுகிறார். – ஸ்ரீ அரவிந்தர்
April 26, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

.”சமயம்” என்னும் பெயரின் கீழ் எவ்வளவு வெறுப்பையும் மடமையையும் மதிப்புடன் திரட்டிக் குவிப்பதில் மனிதர் வெற்றிகண்டுள்ளனர்! – ஸ்ரீ அரவிந்தர்
April 25, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

சமய அமைப்புகளின் கொடுமைக்கும், கோட் பாடுகளின் குறுகிய தன்மைக்கும் எதிராக எழும் இன்றியமையாத கண்டனக் குரலே நாத்திகமாகும். நாத்திகத்தைக் கல்லெனக் கொண்டு இறைவன் அந்த அழுக்கேறிய அட்டைவீடுகளைத் தகர்க்கிறான். – ஸ்ரீ அரவிந்தர்