தன் சாதனைகளில் பெருமிதம் கொள்ளும் குழந்தையைப் போன்றதாகும், அறிவு: அது எதையா வது கண்டுபிடித்தவுடன் உற்சாகக் குரலெழுப்பி, இரைச்சலிட்டு வீதிகளில் ஓடியாடுகின்றது. விவே சுமோ, தன் சாதனைகளை வல்லமைமிக்க மௌனத் திலும் சிந்தனையிலும் நெடுங் காலத்திற்கு […]
எல்லா அறிவையும் தான் வெற்றிகொண்டு விட்டதைப் போல் விஞ்ஞானம் பேசுகின்றது, நடந்து கொள்கின்றது. தனித்துச் செல்லும் விவேகமோ, அளவற்ற ஞானக் கடல்களின் விளிம்புகளில் எதி ரொலிக்கும் தன் காலடியோசையைக் கேட்டவாறே நடையிடுகின்றாள். – ஸ்ரீ அரவிந்தர்
துறவைப் புகழ்ந்துரைத்த விவேகானந்தர், இந் திய வரலாறு முழுவதிலும் ஒரேயொரு ஜனகன் மட்டுமே இருந்ததாகக் கூறியுள்ளார், அது சரியன்று.பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்களெனத் கண்டு நீ புன்னகைபுரிவாய். – ஸ்ரீ அரவிந்தர்
புவியைச் சுற்றி சூரியன் சுழல்கிறது என்பது புலன்களைப் பொறுத்தவரை எப்போதும் மெய்மை யாகும்; பகுத்தறிவுக்கோ அது பொய்மையாகும். சூரி யனைச் சுற்றி புவி சுழல்கிறது என்பது பகுத்தறிவுக்கு எப்போதும் மெய்மையாகும்; பரம்பொருளின் பார்வை யிலோ அதுவும் […]
இறைவனின் பார்வையில் அருகிலுள்ளது. தொலைவிலுள்ளது என்னும் வேறுபாடு இல்லை; தற்காலம், கடந்தகாலம், எதிர்காலம் என்பது இல்லை. இவையெல்லாம் அவனது உலக ஓவியத்தை நோக் குவதற்கு வசதியான நோக்குமுறைகனே. – ஸ்ரீ அரவிந்தர்
நீ உன்னுடைய ஆன்ம அனுபவத்தை மட்டும் வலியுறுத்தி, பிறரது வேறுபட்ட ஆன்ம அனும் வத்தை மறுக்கும்போது, இறைவன் உன்னை ஏமாளி . யாக்குகிறான் என்பதை நீ புரிந்துகொள்ளலாம். உன் ஆன்மாவின் திரைகளுக்குப் பின்னிருந்து எழும் அவனுடைய […]