பின்னே தங்கிய கண்ணிலார் தம்மைக் கூர்ந்து நோக்கிக் குழைந்த ஒருவன் தன்னறி(வு) இன்றித் தவிக்கும் அவர்தம் இனத்தின் சுமையை ஏந்துதல் போலத் தீமையைத் தனக்குச் செய்யும் ஒருவனைக் காக்கும் விதமாய்க் கரைதான் ஏற்றி, இவளே புகல்தந்(து) இதயக் கனிவோ(டு) உணவினை ஊட்டிப் பேணிட வேண்டும். என்ன செய்வதாம் என்றறி யாதே. எதிர்கொள வந்திடும் விதியறி யாதே. எவரின் உதவியும் இல்லா நிலையினின் விளைவு கருதி வினையினுக்(கு) அஞ்சி, முனைந்து முயற்சி செய்வதற் காக முன்னுணர்(வு) இவளே கொண்டிடல் வேண்டும்.
குழைதல் மனம் இளகுதல்
– ஸ்ரீ அரவிந்தர்