பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. எல்லாமே இறைவன்தான். இறைவனைத் தவிர வேறொன்றும் இல்லை. இறைவன் ஒருவன்தான் இருக்கிறாள். நம்மை பயமுறுத்துவதற்காகத் தோன்றுவது எல்லாம் இறைவனின் சிறிய பொருளற்ற மாறுவேடங்கள் தான். – ஸ்ரீ அன்னை
பரமன் தெய்வீக அறிவாகவும் பூரண ஒருமையாகவும் உள்ளான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் அவனை அழைப்போமாக. அப்போது நாம் அவனைத்தவிர வேறொன்றும் இல்லையாக ஆவோம். – ஸ்ரீ அன்னை