என்ன விந்தை! கடவுளின் மீது அன்பு செலுத் தும் மனிதர், மனிதகுலத்தின் மீது அன்பு செலுத்தத் தவறிவிடுகின்றனர். அப்போது அவர்கள் எவர்மீது தான் அன்பு செலுத்துகிறார்கள்? – ஸ்ரீ அரவிந்தர்
பாவங்களிற் கீழான பாவம், பாவியை வெறுப் பதாகும். ஏனெனில் அது கடவுளை வெறுப்பதாகும். ஆனால் அப்பாவத்தைச் செய்பவனோ, தன் உயரிய நற்குணத்தைப் பற்றி இறுமாப்படைகிறான். – ஸ்ரீ அரவிந்தர்
தீயவற்றிலும் அவலட்சணமானவற்றிலும் நன்மை யும் எழிலும் பொருந்திய இறைவனை உணர்ந்து நேசிக்க வேண்டும்; அதேசமயத்தில் அவற்றின் தீமை யையும் அவலட்சணத்தையும் குணப்படுத்துவதற்குத் தூய அன்புடன் வேட்கையுற வேண்டும். இதுவே மெய்யான நற்குணமாகும், அறவொழுக்கமாகும். – ஸ்ரீ […]
அருவருப்பானவற்றின் அழகினைப் பாராட் டிய என் மனம், அநேசமயத்தில், பிறர் ஏன் அவற்றை வெறுத்தனர் அல்லது அருவருத்து ஒதுங்கினர் என் பதையும் முழுமையாக உணர்ந்தபோது, நான் என் மனத்தை வென்றுவிட்டேன் என்பதைத் தெரிந்து கொண்டேன். – […]
சலிப்பூட்டும் ஒரு புத்தகத்தை முழுவதுமாக இர சித்துப் படித்து, அதேசமயத்தில் அதன் சலிப்பின் சிறப்பினையும் புரிந்துகொள்ள என்னால் முடிந்த போது, நான் என் மனத்தை வென்றுவிட்டேன் என்பதைத் தெரிந்துகொண்டேன். – ஸ்ரீ அரவிந்தர்
உண்மையின் மிகக் கொடிய எதிரி வாதத் திறனே; நற்குணத்தின் மிகக் கொடிய எதிரி, தன் நேர்மைபற்றிய இறுமாப்பே. வாதத் திறன், தன் பிழைகனைக் காணும் திறனற்றது; தன் நேர்மை யைப் பற்றி இறுமாப்புக் கொள்பவன், தன் […]
மெய்யான எண்ணங்களின் எதிரிடைகளும் தத்தம் தருணத்திலும் செயற்பாட்டிலும் மெய்யாகவே இருக்கும். மறுக்க முடியாத கோட்பாடுகளே மிக ஆபத்தான பொய்மைகளாகும். – ஸ்ரீ அரவிந்தர்
கடவுள் என்னை மோட்சத்தை நோக்கி இழுப் பாரெனில், அவருடைய மறு கரம் என்னை நரகத் திலேயே தொடர்ந்து ஆழ்த்த முயன்றாலும் நான் மேலேற அருமுயற்சியாற்றுவேன். – ஸ்ரீ அரவிந்தர்