நம் சாதாரண மன உணர்வுக்கும் புலனுணர்வுக் கும் அப்பாற்பட்ட பொருள், தம் மனத்திலும் புலன் களிலும் பிரதிபலிக்கப்படுவதையே மனிதர் போலிப் புலனுணர்வு என்கின்றனர்; இப்பிரதிய லிப்புகளை தவறாகப் புரிந்துகொள்வதே மூட ம் நம்பிக்கைகளின் பிறப்பாகும். இதைத் […]
சடப்பொருளில் நாம் ஆழ்ந்து ஈடுபட்டிருப்பு தால் தமக்குத் தென்படாத உண்மைகளின் கண நேரக் காட்சிகள் அவ்வப்போது நமக்குக் கிடைப் பதுண்டு: அவற்றுக்கு அறிவியல் போலிப் புலனு ணர்வு எனப் பெயரிட்டுள்ளது. பிரபஞ்சந்தழுவிய பரம ஞானம், தன் […]
“இவையெல்லாம் போலிப் புலனுணர்வுகள் என்றனர். “போலிப்புலனுணர்வு என்றால் என்ன?” எனக் கேட்டேன். “எந்த சட மெய்மையுடனும் புற மெய்மையுடனும் தொடர்பற்றதாகிய ஓர் அக அனு பவம் அல்லது மறையனுபவமே அது என்றனர். அப்போது நான் மனிதனுடைய […]
உறுதியூட்டும் சான்றுகள் காட்டிக் கடவுள் இல் லையென்று எனக்கு நிரூபித்தனர், நானும் அவர் களை நம்பினேன். பின்னர் நான கடவுளைக் கண்டேன், அவர் வந்தென்னை அரவணைத்தார். இப்போது நான் எதை நம்புவது, பிறருடைய வாதங் களையா, […]
மரணத்துக்குப் பின் தனிப்பட்ட மனத்தன்மை அழியாதிருக்கக்கூடும் எனினும், அமரத்துவம் என் பது அதுவன்று; உடலைக் கருவியாகவும் சாயலாக வும் கொண்டதும், பிறப்பும் இறப்பும் அற்றதுமாகிய. – ஸ்ரீ அரவிந்தர்
தன் அமரத்துவத்தை என் ஆன்மா, தானறியும். ஆனால் நீயோ ஒரு சவத்தைக் கூறுபோட்டு, “எங்கே உன் ஆன்மா, எங்கே உன் அமரத்துவம்?” என்று வெற்றிமுழக்கமிடுகிறாய். – ஸ்ரீ அரவிந்தர்
உன் நம்பிக்கைகளை மட்டுமே அறிவென்றும், பிறருடைய நம்பிக்கைகளைப் பிழை, அஞ்ஞானம், மோசடி என்றும் கூறாதே; அல்லது சமயப் பிரிவுக ளின் கோட்பாடுகளையும், அவற்றின் சகிப்பின்மை யையும் பழிக்காதே. – ஸ்ரீ அரவிந்தர்