உலகமே துயரங்களாலும் துன்பங்களாலும் நிரம்பியது. வேறு எந்த ஒரு கூடுதலானதுயரத்திற்கும் காரணமானவராக இருக்க எப்போதுமே ஒருவர் முயற்சி செய்யக்கூடாது. – ஸ்ரீ அன்னை
துயரத்தை ஆதரிக்காதே. துயரம் எல்லாம் உன்னைவிட்டு ஒரேயடியாகப் போய்விடும். தவிர்க்க முடியாத ஒன்றல்ல துயரம். துயரமற்ற நிலைத்த உற்சாகமான அமைதியான மனநிலை யில்தான் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகிறது. செயா. – ஸ்ரீ அன்னை
வேதனை என்பது, பேரின்பத்தைத் தாங்கி அதில் வளர நமக்குக் கற்பிக்கும் நம் அன்னையின் தீண்டுதலேயாகும். அவளது இக்கல்வியில் மூன்று கட்டங்கள் உண்டு: முதலாவதாக சகிப்புத்தன்மை, அடுத்து ஆன்மாவின் சமத்துவநிலை, இறுதியாக பரவசநிலை. – ஸ்ரீ அரவிந்தர்
இன்பம் வலியாக அல்லது வலி இன்பமாக மாறும், ஏனெனில் அவற்றின் இரகசிய யதார்த்தத்தில் அவை உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளில் வித்தியாசமாக உருமாற்றம் செய்யப்படுகின்றன. – ஸ்ரீ அரவிந்தர்