November 1, 2021
ஸ்ரீ அன்னை

ஒளி

அவனது ஒளியின் மிகுதிக்காகவும், அவனை வெளிப்படுத்தும் திறனை நம்மில் விழிப்படையச் செய்யவும் இறைவனை அழைக்கிறோம். – ஸ்ரீ அன்னை
October 31, 2021
ஸ்ரீ அரவிந்தர்

சமர்ப்பணம்

சமர்ப்பணம் மனித செயலை தெய்வச் செயலாக்கும். – ஸ்ரீ அரவிந்தர்
October 30, 2021
ஸ்ரீ அரவிந்தர்

அச்சம்

நெருப்புக்கோ அல்லது பிற கொடுமையான சக்திகளுக்கோ கொள்ளும் அனைத்து அச்சமும், வெல்லப்பட வேண்டும் . ஏனென்றால், அச்சம் ஒரு பலவீனத்தைக் காட்டுகிறது – இயற்கையின் மிகப் பெரிய சக்திகளுக்கு எதிரே கூட, சுதந்திரமான ஆன்மா அச்சமின்றி […]
October 29, 2021
ஸ்ரீ அன்னை

உரையாடல்

இனிய அன்னையே, விளையாட்டுத் திடலில் கூட்டு தியானம் நடைபெறும்போது நீங்கள் உடன் இருக்கிறீர்களா? *நிச்சயமாக, எப்போதுமே இருக்கிறேன்.* அதிலிருந்து பயன் பெறுவதற்கு நாங்கள் என்ன தியானம் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும்? *முறை எப்போதும் […]
October 28, 2021
ஸ்ரீ அரவிந்தர்

யோகம்

யோகத்தின் தொடக்கத்தில் ஒருவன் இறைவனை அடிக்கடி மறந்துவிடுவதுண்டு. ஆனால் தொடர்ந்து விழைவதால் இறைவனை நினைவில் வைத்திருப்பது அதிகரிக்கின்றது, மறப்பது குறைகிறது. ஆனால் இந்தத் தொடர்ந்த விழைவு, ஒரு வலுக்கட்டாயமாக, கண்டிப்பான ஒழுக்கப் பயிற்சியாக இருக்கக்கூடாது. அன்பும் மகிழ்வும் […]
October 27, 2021
ஸ்ரீ அன்னை

அன்பு

அன்பு செலுத்துவது என்றால் தன்னையே தருவது. ஒரு மனிதர், மற்றொரு நபரை நேசிக்கும்போது, அவரும் தன்னை நேசிக்கவேண்டும், அதுவும் அவருடைய குணாதிசயத்திற்கு ஏற்பவோ, அவருடைய வழியிலோ அல்லாமல் தான் விரும்பும் மாதிரியே, தன் ஆசைகளைப் பூர்த்தி […]
October 26, 2021
ஸ்ரீ அன்னை

ஓ இறைவா !

ஓ இறைவா ! என் பெருமுயற்சியின் சிகரத்தை நான் எட்ட வேண்டும். என்னுள் இருக்கும் எந்த ஒரு பாகமும் அது உணர்வுள்ளதோ அல்லது உணர்வற்றதோ தங்களின் புனிதத்திட்டத்திற்குச் சேவை செய்வதில் இருந்து விடுபட்டுத் தோல்வி அடையக்கூடாது. […]
October 25, 2021
ஸ்ரீ அன்னை

அன்னையை அழைத்தல்

ஸ்ரீ அன்னை எப்போதும் உன்னுடனே இருக்கிறார் என்பதை நினைவில் கொள். பின்வருமாறு அவரிடம் கூறு. அவர் எல்லா விதமான கஷ்டங்களிலிருந்தும் உன்னை விடுவிப்பார்: அன்னையே ! நீரே என்னுடைய அறிவின் ஒளி, ஆன்மாவின் தூய்மை, பிராணனின் […]
October 24, 2021
ஸ்ரீ அன்னை

நிதானம்

எல்லாத் தொல்லைகளும், நிதானக் குறைவினாலேயே வருகின்றன. எனவே எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும், நாம் கவனமாக, நிதானம் தவறாமல் இருப்போம். – ஸ்ரீ அன்னை