August 6, 2022
ஸ்ரீ அன்னை

பயம்

பயம் என்பது மறைமுகமான சம்மதம் ஆகும். நீ ஏதாவது ஒன்றைப் பற்றி பயப்படுகிறாய் என்றால், அதற்கு நீயே மறைமுகமாய் சம்மதிக்கிறாய் என்று பொருள். அதன் மூலம் அதன் கரத்திற்கு வலுவூட்டுகிறாய். இதனை ஆழ்மனச் சம்மதம் என்று […]
August 1, 2022
ஸ்ரீ அன்னை

உற்சாகமாய் இரு

உற்சாகமாய் இரு !!! உன் முன்னால் வழி திறந்திருக்கிறது. பயம் என்கிற மன நோயை உதறித் தள்ளு. இறை அமைதியைக் கொண்டு வா. பிறகு எல்லாம் சரியாகிவிடும்.
July 31, 2022
ஸ்ரீ அரவிந்தர்

பயம் தான் இறைவன்

பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. எல்லாமே இறைவன்தான். இறைவனைத் தவிர வேறொன்றும் இல்லை. இறைவன் ஒருவன்தான் இருக்கிறாள். நம்மை பயமுறுத்துவதற்காகத் தோன்றுவது எல்லாம் இறைவனின் சிறிய பொருளற்ற மாறுவேடங்கள் தான். – ஸ்ரீ அன்னை
July 29, 2022

பயப்படாதே

பயப்படாதே, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள். இந்த எல்லாத் தொல்லைகளும் உன்னைவிட்டுப் போய்விடும். – ஸ்ரீ அன்னை
June 7, 2022
ஸ்ரீ அன்னை

அச்சம்

அச்சம் என்பது இறைவனின் அருள் மேல் உள்ள நம்பிக்கைக் குறைவையேக் காட்டுகிறது. நமது சமர்ப்பணம் முழுமையற்றதாகவும் ஒழுங்கற்ற தாகவும் உள்ளதைக் காட்டும் சரியான குறியீடே உனக்குள் தோன்றும் அச்சம். – ஸ்ரீ அன்னை
December 19, 2021
ஸ்ரீ அன்னை

அச்சம்

அச்சம் ஏற்படும்போது ஒருவன் என்ன செய்ய வேண்டும் ? பகுதி : ஒன்று ———— அச்சம் உணர்வின்மையால் தோன்றுவது . அது அஞ்ஞானத்திலிருந்து உண்டாகும் ஒருவகையான பெருவேதனை . ஒரு விஷயத்தின் தன்மை நமக்குத் தெரியவில்லை […]
December 16, 2021
ஸ்ரீ அன்னை

அச்சம் தவிர்

ஒருமுறை நீ யோகப் பாதையில் நுழைந்து விட்டால், நீ எல்லா அச்சங்களையும் ஒழித்துக் கட்டவேண்டும் – உன்னுடைய மனத்தின் அச்சம், உன்னுடைய பிராண அச்சம், உடலின் கண்ணறைகளிலே குடி கொண்டுள்ள உன்னுடைய உடலின் அச்சங்கள். திருஉருமாற்றத்தை […]
November 17, 2021
ஸ்ரீ அன்னை

பயங்கொள்ளலாகாது

என் அன்புக் குழந்தாய், நீ எதைக் கண்டும் பயங்கொள்ளலாகாது . இதுதான் திருவுருமாற்றத்திற்கான முதல் பாடம். எனவே ஒவ்வொருவரும் பயத்தை வெற்றி கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். நீ பயப்படும்பொழுது உடனடியாக இறைவனிடம் தஞ்சம் அடைய […]
October 30, 2021
ஸ்ரீ அரவிந்தர்

அச்சம்

நெருப்புக்கோ அல்லது பிற கொடுமையான சக்திகளுக்கோ கொள்ளும் அனைத்து அச்சமும், வெல்லப்பட வேண்டும் . ஏனென்றால், அச்சம் ஒரு பலவீனத்தைக் காட்டுகிறது – இயற்கையின் மிகப் பெரிய சக்திகளுக்கு எதிரே கூட, சுதந்திரமான ஆன்மா அச்சமின்றி […]