January 23, 2023
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

கடுமையைக் காட்டிடும் கடவுட் தன்மையால் அல்லல் பட்டும், அவனின் உடைமையாம் தவிசின் கண்ணே தளைப்பட்(டு) இருந்தும், அவளின் கண்கள் அழாது சிந்திய நிர்மலத் துளிகளை நிவேதனம் ஆக நாளும் படைத்தும் நயக்கா நிலையில் கடுமை குறையாது […]
January 19, 2023

சாவித்ரி

இரவிலே மோதிடும் அரக்கர் வடிவுடை மல்லரைப் போன்றராம் தொன்மை வாதிகள் நிலமும் நேசமும் தண்டனைத் தீர்ப்புமாய் வட்ட வடிவிலே சூழ்ந்த வண்ணம் அனைவரும் அவளிடம் திரும்பி வந்தனர், மனம்சொலும் சான்றினை ஏற்க மறுத்திடும் இயப்பரும் கொடிய […]
January 15, 2023

சாவித்ரி

உயர்ந்த உள்ளுரம் உறையும் இருப்பிடம் நயனம் காணா நகர்வை உணர்ந்திட, உடனடி யாக ஒளியால் பொலிந்தவை எல்லாம் வாழ்வின் இருளறை ஆகின; நினைவுத் திறத்தின் நிலைச்சா ளரங்களோ. – ஸ்ரீ அரவிந்தர்
January 14, 2023

சாவித்ரி

நெடிதாய்த் தன்னின் நீள்சிற(கு) அடிக்கிற ஆற்றல் வாய்ந்த அவளின் ஆன்மா, அவளின் புற்கலத்(து) அரவம் இன்றி அழைப்பு விடுத்த ஆணையி னாலே, செறிதுயில் என்னும் திரைகடல் கொண்ட அலையின் எழுச்சியை அடக்குதல் ஊடே, நொதுமல் தன்மைய […]
January 13, 2023

சாவித்ரி

ஆயினும் அவளங்(கு) அலைவுற்(று) அசைந்தாள் அவளின் வாழ்வும் அண்டச் சுமையைப் பகிர்ந்து கொண்டுதான் பாரம் சுமந்ததே. – ஸ்ரீ அரவிந்தர்
January 12, 2023
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

உறுதி அற்றதோர் உலகத்(து) இயல்பே அவளின் அமைப்பைப் பிடிப்பில் வைத்தது. – ஸ்ரீ அரவிந்தர்
January 11, 2023

சாவித்ரி

அந்த வேளையில் மந்தமாய் ஆங்கோர் நெஞ்சுரம் இலாத நினைவு மலரோ நிழற்படி(வு) ஆக நிலைபெயர்ந்(து) அசைய, தெடுமூச்(சு) எறிந்தவள் நெஞ்சைப் பற்றினாள், தனக்கு நெருங்கியும், தயங்கி நிற்பதும், ஆழத்தும், அடங்கியும், பழகிப் போனதாய்த் தங்கிட அவ்விடம் […]
January 10, 2023

சாவித்ரி

வருத்தம் இவணெதும் திரும்பி வராதும், இன்னற்(கு) உரிய செய்தி என்கிற வாளால் பிளவினை உற்றிடா வண்ணமும் இருபெரு வெற்பின் இடையாழ்(வு) எனும்படி இருநிலை மனச்சான்(று) என்கிற ஆட்சிகளின் எல்லைகள் இடையுள ஆழம் மிக்கதோர் அமைதிப் பிளவில் […]
January 9, 2023
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

வாழ்வைத் தொடங்கிய வகையில் மேவிய பொறுப்பினைச் சுமந்தவள் பொற்புடை நெஞ்சிலே படுதுயர்ச் சாயல் படவே இல்லை: மண்ணக மடந்தையின் மூலப் பண்பாம் த் துவில்தரும் மடியின் மேலே அது) உயிர்த்திறம் மறதியின் இயல்பினால் தனையற்(று) இருந்த சடமாய் […]