September 17, 2021
ஸ்ரீ அன்னை

முன்னேற்றம்

எப்போதும் அதிக நிறைவான வெளிப்பாட்டையும், எப்போதும் அதிக நிறைவான, உயர்வான உணர்வு நிலையையும் நோக்கி நாம் சலிப்பின்றி முன்னேறுவோமாக. – ஸ்ரீ அன்னை
September 16, 2021
ஸ்ரீ அன்னை

அறியாமை

நம் சிந்தனைகள் இன்னும் அறியாமையில் இருக்கின்றன. அவைகள் ஒளியூட்டப்பட வேண்டும். நம் ஆர்வம் இன்னும் குறைபாடு உடையதாய் இருக்கிறது. அது தூய்மைப் படுத்தப்படவேண்டும். நமது செயல்கள் இன்னும் வலுவற்றவையாக இருக்கின்றன. அவை ஆற்றல் வாய்ந்தவையாக ஆக […]
September 15, 2021
ஸ்ரீ அன்னை

நோய்கள் குணமடைய செய்யவேண்டியது

எல்லாவற்றிற்கும், அது எதுவானாலும், அதைக் குணப்படுத்துவதற்கு மிக நிச்சயமான வழி, அமைதியாக இருந்து ஒருமுனைப்பட்டு, மேலிருந்து சக்தி வேலை செய்யும்படி விடுவதுதான். உறுதியான நம்பிக்கையுடனும் வலுவான இச்சாசக்தியுடனும் சரியானபடி, சரியான நேரத்தில் போதிய அளவு காலத்திற்கு […]
September 14, 2021
ஸ்ரீ அரவிந்தர்

பிராண ஆசை

பிராண ஆசையின் தன்மையை நீ சரியாகப் புரிந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அதை நுகர நுகர பிராண ஆசை வளரும், அது திருப்தியடைந்து விடாது. உன்னுடைய ஆசையை நிறைவேற்றினால் அது மேலும் மேலும் வளரத் தொடங்கும். இன்னும் அதிகம் […]
September 13, 2021
ஸ்ரீ அரவிந்தர்

உறக்கம்

காய்ச்சல்கள், மனத்தொல்லை இவற்றிற்கு உறக்கம் பெரிய உதவி. உறக்கம் இல்லாமலிருப்பது மிகவும் கெடுதலாகும் – அது குணப்படுத்தும் ஒரு சாதனத்தை இழப்பதாகும். – ஸ்ரீ அரவிந்தர்
September 12, 2021
ஸ்ரீ அன்னை

உண்மை

என்று பூமி உண்மைக்கு விழிப்புற்று இறைவனுக்காகவே வாழ்கிறதோ, அந்நாளே தெய்வீக ஆசியுடன் கூடிய நன்னாளாகும். – ஸ்ரீ அன்னை
September 11, 2021
ஸ்ரீ அன்னை

முயற்சி

நல்ல வேலையெல்லாம், ஒருங்கிணைந்த பொறுமையுடன் கூடிய முயற்சியினால் செய்யப்படுகின்றன. – ஸ்ரீ அன்னை
September 10, 2021
ஸ்ரீ அரவிந்தர்

ஆசைகள்

ஆசைகளை முற்றிலுமாக உடனடியாக விட்டொழிப்பது கடினம் – சரியான ஆசைகள் மேலோங்கி நின்றால் அதுவே இறுதி வெற்றிக்கு உறுதியளிப்பதாகும், ஆகவே அதற்காக தொல்லைப்படாதே. இவையெல்லாம் படிப்படியாகவே நடக்கும் – முன்னேற்றம் தொடங்கிவிட்டால் சாதனையின் விளைவுபற்றிய அடிப்படையான […]
September 9, 2021
ஸ்ரீ அன்னை

ஆர்வம்

தொடர்ந்து ஆர்வமுறு ! தேவையான முன்னேற்றம் வந்தே தீரும். – ஸ்ரீ அன்னை