சுடர்விட்டு எரியும் நமது தீவிர நன்றியறிதலையும், உவகையும் நம்பிக்கையும் நிறைந்த நமது பற்றுதலையும் ஏற்குமாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம். – ஸ்ரீ அன்னை
ஏன், எப்படி என்றெல்லாம் கேட்காத, எதற்கும் கவலைப்படாத குழந்தையைப் போல், நாம் தெய்வ சங்கல்பம் நிறைவேறும்பொருட்டு இறைவனிடம் நம்மை முழுமையாக ஒப்படைத்திருப்போம். – ஸ்ரீ அன்னை
நாம் இறைவனின் பணி செய்பவர்களாக இருக்கிறோம். செயலைத் தீர்மானிப்பதும், இன்னாருக்கு இன்ன செயல் என்று) நியமிப்பதும், செயலைத் துவக்கி, இயக்கி, நிறைவேற்றி வைப்பதும் இறைவனே. – ஸ்ரீ அன்னை