அழியும் தன்மைய யாவும் ஆங்கே அமரரை வென்றிடும் அவலம் நிலவிட, சின்னாள் வாழ்ந்து தேய்கிற மானிட வார்ப்படம் ஆகிய வானவர் படுகிற கடுந்துயர் அவளுளும் கவிந்து கொண்டது.
அனைத்துயிர் நாளும் அவைதம் வினைகளில் வேறு படாதே விரைவுடன் இயங்கிட, மண்ணில் மற்றும் மரத்தில் வாழும் ஆயிர இனங்கள் ஆங்கெதிர் பாரா(து) அமைந்த வண்ணம் அவ்வப் போதில் தோன்றும் தூண்டலை ஏற்று நடக்கையில், உறுதி இல்லா […]
களைப்புறச் செய்யும் கடமையி னின்றும் விடுதலை பெற்று விழைந்து நுகரும் ஓய்வினை விட்டே ஓய்வு கிடைத்திட, பயண வாழ்வின் வேகம் பற்றிய ஊரவர் அவளாங்(கு) உழலும் சுழல்களில் வழக்கமாய்ப் புரிகிற மழுக்கத் தேடலை மீண்டும் ஒருமுறை […]
உடனிருந்(து) இயங்கிட ஒருவரும் இல்லாப் பெருமை பெற்றப் பெரிதோர் ஆற்றல் என்கிற ஒற்றை இறைவிளி ஆங்கே வான்வெளி நிலவும் அவிரொளி வழங்கும் அற்புதப் பொருளையும் அழகிய உருவையும் எங்கோ தொலைவில் உள்ளதோர் ஏதோ மறைகாப்(பு) உலகினுள் […]