சூழ்ந்தோர் எவர்க்கெலாம் துருவவிண் மீனாய் பாய்மரம் தாங்கும் பரிவுக் கயிறாய் இவளிருந் தாளோ அவர்யா வரையும் இருண்டமுன் னறிவால் இருந்தாள் பிரிந்தே, துன்பம் தருகிற துவனல் தனையும் அதுதரும் நோவையும் அடுத்தவர் எவர்க்கும் பங்காய் அளித்திடாப் பாங்கினள் ஆதலின், பிளவுற்(று) உடைந்ததாம் பேரிடர் எல்லையில் எதிர்ப்படும் துயர்கள் எல்லா வற்றையும் தானே தாங்கிட, வைத்தனள் மறைத்தே.
– ஸ்ரீ அரவிந்தர்