February 9, 2024

சிந்தனைப் பொறிகள்

பண்டைய சாத்திரங்கள், அசுரர்களே மூத்த தேவர்கள் என்கின்றன; அது இப்போதும் உண் மையே. மேலும், ஓர் அசுரனை மறைவாகத் தன்னுள் கொண்டிராத தேவர் எவரும் முழுமையான தெய் வத்தன்மையைக் கொண்டவர் அல்லர். – ஸ்ரீ அரவிந்தர்
February 3, 2024

சிந்தனைப் பொறிகள்

புனிதரும் தேவதூதரும் மட்டுமே தெய்வத்தன் மையுடையோர் என்று எண்ணாதே; அசுரனையும் இராட்சதனையும் கூட வியந்து போற்று. – ஸ்ரீ அரவிந்தர்
February 2, 2024

சிந்தனைப் பொறிகள்

பகைவரைப் பற்றிப் பேசுகின்றனர், ஆனால் அப்பகைவர் எங்குளர்? இப்பிரபஞ்சப் பெருங்களத் தில் மற்போரிடும் ஓர் அணியையோ பிறிதோர் அணியையோ சார்ந்த மற்போர்வீரர்களையே நான் காண்கிறேன். – ஸ்ரீ அரவிந்தர்
February 1, 2024

சிந்தனைப் பொறிகள்

வெறுப்பு ஒரு சக்திவாய்ந்த வாளாகும். ஆனால் அது இருபுறமும் வெட்டுகின்ற வாளாகும். தன் இலக்கைத் தாக்கத் தவறினால் சீற்றத்துடன் திரும்பிவந்து தன்னை அனுப்பியவனையே அழிக் கும் தன்மையுடையதாகிய, கிருத்யம் என்னும் பண் டைய சூனியக்காரர்களின் மந்திரசக்தியைப் […]
January 31, 2024

சிந்தனைப் பொறிகள்

உன்னைக் கொடுமைப்படுத்துபவனை வெறுக் காதே. ஏனெனில் அவன் வலியோனாயின், உன் வெறுப்பு அவனுடைய எதிர்ப்பை மேலும் வலிமை யுறச் செய்யும்; அவன் வலுவற்றவன் எனில், உன் வெறுப்புக்குத் தேவைதான் ஏது? – ஸ்ரீ அரவிந்தர்
January 30, 2024

சிந்தனைப் பொறிகள்

சுட்டெரிக்கும் தெய்விகத்தன் மையுடனும் கடுஞ் சீற்றத்துடனும் ஆற்றலுடனும் தன்னுள் பாயும் காளி யைத் தாங்கவல்லோன் யார்? ஏற்கனவே கண்ண னால் ஆட்கொள்ளப்பட்டுள்ள மனிதனே. – ஸ்ரீ அரவிந்தர்
January 29, 2024

சிந்தனைப் பொறிகள்

மரணத்தையும் புற இன்னல்களையும் பற்றிக் கவிஞர்கள் பெரிதளவு பேசுகின்றனர்; ஆனால் ஆன்மாவின் தோல்விகளே உண்மையான துன்பக் கதைகளாகும், தெய்விகத்தை நோக்கி மனிதன் வெற் றிகரமாக உயர்வதே உண்மையான வீரக் காப்பிய மாகும். – ஸ்ரீ அரவிந்தர்
January 28, 2024

சிந்தனைப் பொறிகள்

வலிமை, கோபத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்போது அது மாண்புமிக்கதாகும்; அழிப்பு தில் சிறப்பு இருக்கலாம். ஆனால் அது பழிவாங்கும் நோக்குடன் செய்யப்படும்போது தாழ்வுறுகின்றது. இவற்றை விட்டொழி, ஏனெனில் இவை மனிதனின் கீழியல்பைச் சார்ந்தவையாகும். – ஸ்ரீ அரவிந்தர்
January 15, 2024

சிந்தனைப் பொறிகள்

சீற்றம் பெருந்தன்மை மிக்கதாகவும், பழிவாங் குதல் சிறப்புமிக்கதாகவும் இருக்கக்கூடும் என்று நான் என் அறியாமையில் எண்ணியிருந்தேன். ஆனால் இப்போதோ, கிரேக்க மாவீரன் ஆகிலி ஸின் கடுஞ்சீற்றத்தை நான் நோக்கும்போது, மிக நேர்த்தியானதொரு குழந்தையின் மிக நேர்த்தியான […]