அச்சம் என்பது இறைவனின் அருள் மேல் உள்ள நம்பிக்கைக் குறைவையேக் காட்டுகிறது. நமது சமர்ப்பணம் முழுமையற்றதாகவும் ஒழுங்கற்ற தாகவும் உள்ளதைக் காட்டும் சரியான குறியீடே உனக்குள் தோன்றும் அச்சம். – ஸ்ரீ அன்னை
நீ இப்போதுள்ள நிலையில் உனக்குத் திருப்தி இல்லை எனில் இறைவனிடம் இருந்து உதவியைப் பெற்று உனக்கு அனுகூலம் ஆக்கிக்கொள்; உன்னை மாற்றிக் கொள். உன்னை மாற்றிக் கொள்ளும் தைரியம் உனக்கு இல்லையெனில் விதியிடம் உன்னை ஒப்படைத்துவிட்டு […]
நான் எப்போதும் கேலி செய்வதாகத் தோன்றலாம். ஆனால் அது வெறும் வேடிக்கைக்காகச் சொன்னதன்று. உள்ளத்தில் இருந்து எழும்பும் நம்பிக்கை அது. தெய்வீக சக்தியை எதிர்த்து எதுவுமே நிற்க முடியாது என்ற நம்பிக்கையைப் புன்னகை வெளிப்படுத்துகிறது. கடைசியில் […]
எப்போதும் முணுமுணுத்துக் கொண்டிருக்காதே. நீ முணுமுணுக்கும்போது எல்லாவிதமான கெட்ட சக்திகளும் உன்னுள்ளே நுழைந்து உன்னைக் கீழே தள்ளிவிடுகின்றன. மகிழ்வாய்ப் புன்னகை செய்து கொண்டே இரு. – ஸ்ரீ அன்னை
முழுமையின் பாதையில் முன்னேற விரும்புகிறவன் வழியில் எதிர்ப்படும் இடையூறுகள் பற்றிக் குறை கூறக்கூடாது. ஏனெனில் ஒவ்வொரு இடையூறும் ஒரு புதிய முன்னேற்றத்திற்குத்தான். குறை சொல்வது பலவீனத்திற்கும் நேர்மையின்மைக்கும் அறிகுறி ஆகும். – ஸ்ரீ அன்னை