March 29, 2022
ஸ்ரீ அன்னை

எண்ணம்

நம்முடைய எண்ணங்கள் இறைவனை நோக்கித் திரும்பும் போதும், நம்மையே இறைவனுக்கு அர்ப்பணித்துக் கொள்ளும் போதும், யாவும் எவ்வளவு அழகாகவும், மாட்சிமிக்கதாகவும், எளிமையாகவும், அமைதியாகவும் மாறிவிடுகிறது – ஸ்ரீ அன்னை
March 28, 2022

அருள்

அருள் என்றுமே நம்மைக் கைவிடுவதில்லை. இந்த நம்பிக்கையை நம் உள்ளத்தில் எப்போதும் கொண்டிருக்க வேண்டும். – ஸ்ரீ அன்னை
March 27, 2022
ஸ்ரீ அன்னை

அமைதி

உன்னுடைய இதயத்திலும் மனத்திலும் இறைவனுடைய அமைதி ஆட்சி செய்யட்டும். – ஸ்ரீ அன்னை
March 26, 2022
ஸ்ரீ அன்னை

அன்பு

இறைவனுடைய உண்மையை அன்புடனும், மகிழ்ச்சியுடனும் பின்பற்றுவது தான் முக்கியம் – ஸ்ரீ அன்னை
March 25, 2022
ஸ்ரீ அன்னை

ஆறுதல

இறைவனின் அன்பில் நாம் எப்போதும் ஆதரவையும், ஆறுதலையும் காணமுடியும். – ஸ்ரீ அன்னை
March 24, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஈஸ்வரன்

இறுதியாக நீயே ஈஸ்வரனாக இருப்பதை உணர்ந்து கொள்; ஆனால் இதற்கென்று ஒரு வடிவத்தை அமைக்காதே; இதற்கென ஒரு தனிப்பட்ட பண்பைத் தேடாதே. உனக்குள்ளே அவனுடன் ஒன்றி விடு. உனது உணர்வில் அவனுடன் தொடர்பு கொள்.உனது ஆற்றலில் […]
March 23, 2022
ஸ்ரீ அரவிந்தர்

நேர்மை

நேர்மையாக இல்லாதவர்கள் அன்னையின் உதவியால் பயனடைய மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் தாமாகவே அதைத் திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.அவர்கள் மாறினால் ஒழிய, அவர்கள் தாழ்ந்த பிராணனுக்குள்ளும் உடல் இயற்கையினுள்ளும் அதிமன ஒளி மற்றும் உண்மையின் இறக்கத்தை எதிர்பார்க்க முடியாது; […]
March 22, 2022
ஸ்ரீ அன்னை

தூதுவன்

மாந்தரிடையே உனது வருகையைக் கட்டியங் கூறும் தூதுவளாக என்னை நியமிப்பாய், ஓ, பிரபு! தகுதி பெற்ற மாந்தரெல்லாம் இந்த இன்பத்தை நுகரட்டும். எல்லையற்ற கருணையினால் நீ எனக்களித்திருக்கும் இப்பேரின்பத்தை எல்லோரும் நுகரட்டும்; உனது பேரமைதி உலக […]
March 21, 2022
ஸ்ரீ அன்னை

ஆபத்து

ஆபத்தான வேளையில் பூரண அமைதியே தேவை. – ஸ்ரீ அன்னை