July 23, 2022
ஸ்ரீ அன்னை

சரணாகதி

இறைவனிடம் முழுமையாக சரணாகதி அடையாமல் விட்டமையே உன் கடந்த காலத் ‘தவறுகளுக்குக் காரணமாகும். அந்தத் தவறுகளைச் சரி செய்ய ஒரே வழி, உன்னை இறைவனிடம் அர்ப்பணிப்பதுதான். உண்மையாக. – ஸ்ரீ அன்னை
July 22, 2022

ஆற்றல்

நம்முடைய குறைகளை, பலவீனங்களை எண்ணிப் பார்ப்பது சரிதான். ஆனால் அது புதிய முன்னேற்றத் திற்கான பெரிய தைரியத்தை நமக்கு அளிப்பதாய் இருக்க வேண்டும். எதிர்கால முழுமைக்கும் வெற்றிக்கும் தேவையான தீர்க்கமான முடிவுக்கு நாம் வர முழு […]
July 21, 2022
ஸ்ரீ அன்னை

தூய்மை, ஒளி, அமைதி

ஒருவர் தம்மிடம் உள்ள தூய்மையான விஷயங்களையே நினைத்துக் கொண்டிருத்தல் ஒருவர் தம்மிடம் எதற்கும் உதவாது. நம் சிந்தனையை தாம் அடைய வேண்டிய தூய்மை, ஒளி, அமைதி ஆகியவற்றின் மீதே செலுத்த வேண்டும்.
July 20, 2022

நேர்மை

நாம் தவறு செய்து விடுவோமோ என்று ஒருவர் தன்னையே நொந்து கொள்ளத் தேவையில்லை. தன்னுடைய இறைவேட்கையில் முழு நேர்மையும் ஒருவர் வைத்திருந்தால் கடைசியில் எல்லாம் சரியாகிவிடும். – ஸ்ரீ அன்னை
July 19, 2022

கவனமாய் இருக்க வேண்டும்

நீ வாழ்க்கையில் ஒரு தவறை செய்துவிட்டால், உன் வாழ்க்கை முழுவதும் துன்பப்பட வேண்டும். அதைப் போலவே எல்லாரும் துன்பப்படுவார்கள் என்று அதற்குப் பொருள் அல்ல. தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தும் துன்பப்படாதவர்கள் இருக்கிறார்கள். ஆனால், […]
July 18, 2022

பாவம்

பாவம் என்பது உலகைச் சார்ந்தது. யோகத்தைச் சார்ந்தது அல்ல. – ஸ்ரீ அன்னை
July 17, 2022
ஸ்ரீ அரவிந்தர்

வெற்றி

இறைவனை அறியவும் அவனாக வாழவும் விரும்பும்  உன் ஆன்மாவின் வேட்கையையே நீ உணர்கிறாய். விடாது முயற்சி செய். மேலும் மேலும் நேர்மையுடன் செயல்படு. நீ நிச்சயம் வெற்றி பெறுவாய். – ஸ்ரீ அன்னை
July 16, 2022
ஸ்ரீ அரவிந்தர்

குறைகள்

எல்லாம் வல்ல இறைவனைப் பொறுத்த வரையில் பாவம் என்பதே இல்லை. நேர்மையான தெய்வீக வேட்கையாலும் தெய்வீக மாற்றத்தாலும் எல்லாக் குறைகளையும் களைய முடியும். – ஸ்ரீ அன்னை
July 15, 2022

விளைவுகள் மறைந்துவிடும்

பழைய தவறுகள் குறைகள் ஏதாவது இருப்பின், அவற்றின் விளைவுகள் இறையருளின் தலையீட்டால் மறைந்துவிடும். – ஸ்ரீ அன்னை