faith

May 28, 2022
ஸ்ரீ அன்னை

நம்பிக்கை

நம்பிக்கையுடன் இரு. நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்.அதாவது முன்னோக்கிப் பெரிய அடியை நீ எடுத்து வைப்பாய். – ஸ்ரீ அன்னை  
May 20, 2022
ஸ்ரீ அன்னை

நம்பிக்கை

இறைவனின் அருள் என்றுமே நம்மை கைவிடாமல் காத்துக் கொண்டிருக்கும். இதனை, மனதில் உறுதியுடன் நம்புங்கள். அவர் ஒருபோதும் நம்மை கைவிடாமல் இருக்க இந்த நம்பிக்கை ஒன்றே போதும். – ஸ்ரீ அன்னை
April 3, 2022
ஸ்ரீ அன்னை

நம்பிக்கை

நாம் இறைவனின் அருளின் மேல் நம்பிக்கை வைக்கும் போது திடமான உறுதியான ஒரு துணிவைப் பெறுகிறோம். – ஸ்ரீ அன்னை
January 16, 2022
ஸ்ரீ அன்னை

நம்பிக்கை

நாம் நம்பிக்கை இழந்து, இறைவனிடம் கதறும்போது, இறைவனின் பதில் தவறாமல் கிடைக்கிறது. – ஸ்ரீ அன்னை
December 5, 2021
ஸ்ரீ அரவிந்தர்

நம்பிக்கை

எங்கணும் இறைவனைக் காணுங்கள், தோற்றங்களைக் கண்டு அச்சமடையாதீர்கள். எல்லாத் தீமைகளுமே மெய்மை உருவாகிவரும் நிலையே, உண்மை வெளிப்படுவதற்கான முயற்சியே என்று நம்புங்கள். தோல்விகளனைத்தும் இறுதியில் பலன் தருபனவற்றின் மறைமுகத் தோற்றங்களே என்றும், பார்வைக்கு மறைந்துள்ள ஆற்றலே […]
November 9, 2021
ஸ்ரீ அன்னை

நம்பிக்கை

ஒவ்வொரு கணமும் முன்கூட்டியே கண்டுகொள்ள முடியாதவை, அறியப்படாதவை நம்முன் உள்ளன. நமக்கு என்ன நேர்கிறது என்பது பெரும்பாலும் நமது நம்பிக்கையின் தீவிரத்தையும் தூய்மையையும் பொறுத்ததாக இருக்கும். – ஸ்ரீ அன்னை
August 22, 2021
ஸ்ரீ அன்னை

நம்பிக்கை

தளராத நம்பிக்கை நமக்கு உள்ள வழித்துணை. – ஸ்ரீ அன்னை
August 18, 2021
ஸ்ரீ அன்னை

பற்றுதல்

தெய்வ சங்கற்பத்தில் நமக்கு உள்ள பற்றுதல் பூரணமாக இருக்கும்பொழுது, நம்முடைய அமைதியும், மகிழ்ச்சியும் முழுமை பெறுகின்றன. – ஸ்ரீ அன்னை
August 16, 2021
ஸ்ரீ அன்னை

நம்பிக்கை

இருள் செறிந்த நாட்களில் நம்பிக்கையே நிச்சயமான வழிகாட்டியாம். – ஸ்ரீ அன்னை