About Us

ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னையின் குழந்தைகளுக்கு அவர்களின்  படைப்புகளை படித்து புரிந்துகொள்ள மொழி ஒரு தடையாக அமையக்கூடாது.தமிழ் பேசும் அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஸ்ரீ அரவிந்தர் அன்னையின் அருளாசியோடு உருவாக்கப்பட்ட தளம் தான் இந்த ஆரோஉலகம் (AuroUlagam).

அவர்கள் அருளிச்சென்ற எண்ணற்ற உன்னத மொழிகளில் இருந்து, நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி ஏற்றம் பெற உகந்த சில வரிகளை தினந்தோறும் காலை உங்களுக்கு தருவிப்பதே இந்த மையத்தின் நோக்கம்.

அன்பர்கள் அதைப்  படித்து , நெஞ்சில் நிறுத்தி தமது அன்றாட வாழ்வில்  பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டுகிறோம். முதலில் பழக்கமாக இருப்பது நாளைடைவில் தங்களின் நிரந்தர குணமாக மாறிவிடும்.

இந்தத் தளத்தை தங்களுடையதாகக் கொண்டு தாமும் பயன்பெற்று மற்ற அன்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

ஆரோ இன்சிப்ரஷன்ஸ் (AuroInspirations) மற்றும் ஆரோ துனியா (AuroDunia) தளங்களைப்  போல  ஆரோ உலகமும் தங்களை ஸ்ரீ அரவிந்தர் அன்னை அருகே அழைத்துச் செல்லும் என்று நம்புகிறோம்.

Email: reachus@insearchofthemother.org