ஒவ்வொரு மனிதனிடமும், விலங்கினத்தின் குணம் பதுங்கி இருக்கிறது. அது தன்னை வெளிப்படுத்த, கவனக்குறைவான தருணத்தை எதிர்பார்க்கிறது. இடையறா விழிப்பு நிலையே இதற்கு மருந்தாகும். – ஸ்ரீ அன்னை
ஸ்ரீ அரவிந்தர் எப்போதும் நமக்கு ஒளியூட்டிக்கொண்டும், வழிகாட்டியவாறும், நம்மைப் பாதுகாத்தபடியும் நம்முடனே இருக்கிறார். அவரது பெருங்கருணைக்கு முழு நம்பிக்கையின் மூலமாக நாம் பிரதி செய்வோமாக.
அதிமானிட உண்மைக்கும் ஒளிக்கும் சேவை செய்யவும், அவை நம்முள்ளும், இப்புவியிலும் வெளிப்பட முன்னேற்பாடுகள் செய்யவும் தான் நாம் இங்கே இருக்கிறோம் என்பதை எக்காலமும் மறக்கலாகாது. – ஸ்ரீ அன்னை
எல்லாத் தொல்லைகளும், நிதானக் குறைவினாலேயே வருகின்றன. எனவே எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும், நாம் கவனமாக, நிதானம் தவறாமல் இருப்போம். – ஸ்ரீ அன்னை