பிறர் துன்புறுவதைக் காணும்போது நான் வருத்தமடைகிறேன். ஆனால் எனதல்லாத ஒரு விவேகம், அந்தத் துன்பத்தால் வரவிருக்கும் நன்மை யைக் காண்கிறது, அதை ஏற்றுக்கொள்கிறது. – ஸ்ரீ அரவிந்தர்
இன்னலைக் கண்டு வாட்டமுற்று தான் அதைத் தீயது என்னும்போது, அல்லது நான் பொறாமைப் பட்டு மனமுடையும்போது, நித்திய மடையன் என் னுள் விழித்தெழுந்துவிட்டான் எனபதை நான் அறிந்துகொள்கிறேன். – ஸ்ரீ அரவிந்தர்
கடவுள் ஒர் அடியின் வாயிலாக எனக்கு நன்மை யளித்தார். “அனைத்தும் வல்லவனே, நீ இழைத்த துன்பத்திற்கும் கொடுமைக்கும் உன்னை மன்னிக்கி றேன், ஆனால் மீண்டும் அப்படிச் செய்யாதே” என்றா நான் கூறுவது? – ஸ்ரீ அரவிந்தர்
கடவுள் என் கண்களைத் திறந்துவிட்டார்; இழி யோரின் பெருந்தன்மையையும், வெறுப்பூட்டுவோ ரின் கவர்ச்சியையும், ஊனமுற்றோரின் முழுமை யையும், அருவருப்பானவரின் அழகையும் நான் கண்டேன். – ஸ்ரீ அரவிந்தர்
தற்செயலான நிகழ்ச்சி என்பது இப்பிரபஞ்சத் தில் இல்லை; மாயை என்னும் கருத்தும் ஒரு மாயையே. ஒர் உண்மையைத் திரித்து மறைக்கும் வடிவமாக இல்லாத மாயை எதுவும் மனித மனத்தில் இதுகாறும் இருந்ததில்லை. – ஸ்ரீ அரவிந்தர்
நான் பகுத்தறிவைக் கொண்டிருந்த போது பல பொருட்களிலிருந்து வெறுப்புற்று விலகினேன். பகுத்தறிவை இழந்து நான் பார்வையைப் பெற்ற பின், அருவருப்பானவற்றை, வெறுப்பூட்டுபவற்றை உலகெங்கும் தேடியலைந்தேன், ஆனால் அவற்றை எங்கும் கண்டிலேன். – ஸ்ரீ அரவிந்தர்