கடவுள் மனிதனை வழிநடத்துகிறார், மனித னோ தன்னைத் தவறான வழியில் செலுத்துகிறான்; மனிதனின் சாவுக்குட்பட்ட கீழியல்பு தடுமாறு வதை உயரியல்பு கண்காணிக்கிறது. இம்முரண் பாட்டிலிருந்து, இச்சிக்கலிலிருந்து நாம் விடுபட்டு நம் இயல்பின் ஒருமைப்பாட்டினை எய்த வேண்டும்; […]