உன் இடையூறுகளை மற. இறைவனின் பணியைச் செய்ய அவனுடைய முழுமையான கருவியாக இருப்பதையே மேலும் மேலும் நினை. இறைவன் உன் எல்லாத் துன்பங்களையும் வென்று உன்னை தெய்வீக மாற்றம் அடையச் செய்வான். – ஸ்ரீ அன்னை
ஓர் இலட்சியத்திற்காக வாழும் வாழ்வில் கிடைக்கும் மகிழ்ச்சியே நம் பாதையில் எதிர்ப்படும் சிரமங்களுக்குக் கிடைக்கும் இழப்பிடு ஆகும். உள் விதியின் மேல் நம்பிக்கை வை. உன் பாதை வெளிச்சமாகும். – ஸ்ரீ அன்னை
அடையப்போகும் உயர்ந்த இலட்சியத்தையும் பணியையும் நாம் எப்போதும் மனதில் கொள்ளவேண்டும். சின்னச் சின்ன விவரங்கள், அற்பமான விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடாது. நல்ல வானிலையைப் பாதிக்காத சிறு மேகங்கள் போல அவை வரட்டும், போகட்டும். – […]
அற்ப விஷயங்களுக்கு எல்லாம் அதிக முக்கியத்துவம் தரவேண்டாம். உணரப்பட வேண்டிய நிறைவான முழுமைப் பொருளைச் சிந்திப்பது ஒன்றே முக்கியமானதாகும். அதை உணர்வதற்கே நாம் முடிந்த வரை முயற்சி செய்ய வேண்டும். உலகில் நாம் அடையவிருக்கும் உயரிய […]
முன்னேற்றத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் கவலைப்படுவது முன்னேற்றத்திற்குத் தடையாகவே அமையும். முழு நம்பிக்கையுடனும் எளிமையுணர்வோடும் இறைவனின் உதவிக்காக நம்மைத் திறப்பதும் வெற்றியின் மேல் நம்பிக்கை வைப்பதும் நல்லது. – ஸ்ரீ அன்னை