January 5, 2024

சிந்தனைப் பொறிகள்

உன் அருகில் இருப்போரினுள் உறையும் கட வுளுக்கெனவும், உன்னுள் இருக்கும் கடவுளுக்கென வும், உன் நாட்டிலும் உன் பகைவனின் நாட்டிலும் உறையும் கடவுளுக்கெனவும், மனிதகுலத்தில் உள்ள கடவுளுக்கெனவும், மரத்திலும் கல்லிலும் விலங்கி லும் இருக்கும் கடவுளுக்கெனவும், […]
January 4, 2024

சிந்தனைப் பொறிகள்

கிறிஸ்து இவ்வுலகினுள் வந்தது தூய்மைப் பாட்டிற்காகவே, நிறைவேற்றத்திற்காக அன்று. தம் திருப்பணியின் தோல்வியையும், தம்மைப் புறக்க ணித்த உலகினுள் இறைவனின் வாளுடன் தாம் மீண்டும் வரவேண்டியதன் தேவையையும் அவர் முன்பிருந்தே அறிந்திருந்தார்.  
January 3, 2024

சிந்தனைப் பொறிகள்

ஆன்மா, இயற்கை ஆகிய இரண்டின் உறுதி யான, பூரண ஒன்றிப்பையே யோகத்தில் சிலுவை யென்னும் சின்னம் குறிக்கிறது. ஆனால் நாம் அஞ்ஞானத்தின் மாசுகளிடையே விழுந்துவிட்டமை யால், அது துன்பத்திற்கும் தூய்மைப்பாட்டிற்கும் சின்னமாகிவிட்டது.
January 2, 2024

சிந்தனைப் பொறிகள்

நாம் அஞ்ஞானத்தில் தளையுற்று இருக்கும்போ தும்கூட, கடவுள் நம்மை எப்போதும் சரியாகளே வழிநடத்துகிறார்; ஆனால் நாம் இலக்கை அடைவது நிச்சயம் எனினும், இவ்வாறு தளையுறுவதால் நேர் வழியிலிருந்து விலகி, சுற்றிவளைத்துச் சென்று இலக்கை அடைகிறோம்.
January 1, 2024

Happy New Year 2024

Happy New Year 2024
December 22, 2023

சிந்தனைப் பொறிகள்

விதிகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கும் ஆற்றலே சுதந்திரத்திற்கான அடிப்படையாகும். எனவே பெரும்பாலான ஒழுக்கமுறைகளில், ஆன்மா தன்னுடைய கீழ்ப் பாகங்களில் விதிகளைக் கடைப்பிடித்து நிறைவேற்றிய பின்னர்தான் அது தன் தெய்விக நிலையின் பூரண சுதந்திரத்திற்கு எழு வது சாத்தியமாகிறது. […]
December 21, 2023

சிந்தனைப் பொறிகள்

பரிணாமம் இன்னும் முற்றுப் பெறவில்வை; பகுத்தறிவு இறுதிச் சொல்லன்று, பகுத்தறியும் விலங் காகிய மனிதன் இயற்கையின் மிக உயரிய வடிவம் அல்லன். விலங்கிலிருந்து மனிதன் வெளிப்பட்ட தைப் போலவே மனிதனிலிருந்து அதிமனிதன் வெளிப்படுகிறான்.  
December 20, 2023

சிந்தனைப் பொறிகள்

நீ எய்தியுள்ள அறிவினை வாழ்வில் வெளிப்ப 19த்து, அந்த அறிவாகவே ஆகிவிடு: அப்போது உன் அறிவு உன்னுள் உறையும் இறைவனாக இருக்கும். – ஸ்ரீ அரவிந்தர்
December 19, 2023

சிந்தனைப் பொறிகள்

வெற்றுத் தத்துவங்களென்னும் பயனற்ற வலையினுள் சிக்கிவிடாதே,விளைவற்ற அறிவுத் திறன் என்னும் வறட்டுத் தூசியை விலக்கி ஒதுக்கு. உயிருள்ள ஆனந்தத்தை அடைய உதவக்கூடியதும், செயல், குணம், படைப்பு, இருக்கும் பான்மை ஆகி யவற்றில் வெளிப்படக் கூடியதுமான அறிவு […]