சூரியர் தம்மின் ஓரிழை கூட முதலில் உட்புக முடியா(து) இருந்த வெற்பிடைச் சிறுதுளை அந்த வேளையில் அருளுடை மொழியுடன் ஆர்வக் கனலை வழிந்தோட வைத்தது நீர்க்கால் போலே. – ஸ்ரீ அரவிந்தர்
சாய்நிலை இருக்கையில் ஓய்வுறும் தெய்வம் அணித்தமேல் அங்கி நழுவிய(து) ஒப்பத் தொடர்ந்திருப் பதிலே தோல்வி கண்ட இரவுப் பொழுதும் தழுவிப் போனது. – ஸ்ரீ அரவிந்தர்
அருகே அணுகத் துணிதற்(கு) அரிதாய் எதையும் விரும்பா இரக்கம் அற்றதோர் அடரிருள் அரக்கனின் கருமையி னூடே, நம்பிக்கை ஒன்று நன்கு துணிந்து பதுங்கிப் பதுங்கிக் கள்ளமாய் ஊர்ந்தது. – ஸ்ரீ அரவிந்தர்