உணர்ச்சிகளையோ, எண்ணங் களையோ ஒழுங்குபடுத்துவதைவிட பலவந்தமாக அடக்குவது சுல்பமே. ஆனால் உண்மையான ஒழுங்கு நிலையில் வைப்பதென்பது அடக்கு முறையைவிட பன்மடங்கு சிறந்தது. எனது ஆசிகள் – ஸ்ரீ அன்னை
இறைவன் நமக்கு எதை அளித்துள்ளானோ அதில் நாம் மன நிறைவு காண வேண்டும். இறைவன் நாம் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறானோ அதை பலவீனமும், பயனற்ற பேராசையும் இன்றி செய்ய வேண்டும். எனது ஆசிகள். – […]
இன்று செய்ய முடியாததை பின்னொரு நாள் நிச்சயமாகச் செய்ய முடியும். முன்னேற்றத்துக்காக செய்யப்படும் எந்த முயற்சியும் ஒருபோதும் வீணாவதில்லை. எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை