ஒவ்வொரு கணமும் முன்கூட்டியே கண்டுகொள்ள முடியாதவை, அறியப்படாதவை நம்முன் உள்ளன. நமக்கு என்ன நேர்கிறது என்பது பெரும்பாலும் நமது நம்பிக்கையின் தீவிரத்தையும் தூய்மையையும் பொறுத்ததாக இருக்கும். – ஸ்ரீ அன்னை
இறைவன் மேன்மேலும் நமக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும், மேலும், மேலும், ஒளியூட்டவேண்டும், நம் அறியாமையை விரட்டி, நம் மனத்தில் அறிவொளியை ஏற்றவேண்டும் என்று நாம் பிரார்த்தனை செய்கிறோம். – ஸ்ரீ அன்னை
இறைவனுடைய சர்வ வல்லமையுள்ள சக்தியில் உண்மையான, உயிருள்ள நம்பிக்கையும் முழு நிச்சயமும் நமக்கு இருக்குமானால், இந்தப் பூவுலகம் முழுவதையும் திருஉருமாற்றம் செய்யும் வகையில் இறைவனின் வெளிப்பாடு தெளிவாகிவிடும். – ஸ்ரீ அன்னை