August 21, 2021
ஸ்ரீ அன்னை

அறியாமை

இவ்வுலகம் இன்னும் அறியாமையினாலும் பொய்மையினாலும் ஆளப்பட்டு வருகிறது. எனினும் உண்மை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. – ஸ்ரீ அன்னை
August 20, 2021
ஸ்ரீ அன்னை

நோய் மற்றும் பலம்

உன் உடலில் இன்னும் அதிக சாந்தியையும் அமைதியையும் நிலைநாட்டு. அது நோய் தாக்குதல்களை எதிர்க்கும் பலத்தை உனக்குக் கொடுக்கும். – ஸ்ரீ அன்னை
August 19, 2021
ஸ்ரீ அரவிந்தர்

ஓய்வு

உண்மையான ஓய்வு, சாந்தி, மோனம், ஆசையின்மை இவற்றை அடிப்படையாகக் கொண்ட அக வாழ்விலேயே உள்ளது. இதைத் தவிர வேறு ஓய்வு இல்லை – ஏனெனில் அது இல்லாவிட்டால் நீ அதில் ஈடுபாடு காட்டினாலும் காட்டாவிட்டாலும் இயந்திரம் வேலை […]
August 18, 2021
ஸ்ரீ அன்னை

பற்றுதல்

தெய்வ சங்கற்பத்தில் நமக்கு உள்ள பற்றுதல் பூரணமாக இருக்கும்பொழுது, நம்முடைய அமைதியும், மகிழ்ச்சியும் முழுமை பெறுகின்றன. – ஸ்ரீ அன்னை
August 17, 2021
ஸ்ரீ அன்னை

பாதை

பாதையை அறியும்போது அதில் நடந்து செல்வது எளிது. – ஸ்ரீ அன்னை
August 16, 2021
ஸ்ரீ அன்னை

நம்பிக்கை

இருள் செறிந்த நாட்களில் நம்பிக்கையே நிச்சயமான வழிகாட்டியாம். – ஸ்ரீ அன்னை
August 15, 2021
ஸ்ரீ அன்னை

பிறந்ததின செய்தி

ஒரு பிறந்ததின செய்தி இந்த உன்னுடைய பிறந்த நாள் இறைவனுக்கு உன்னை மேன்மேலும் அளிப்பதற்கான வாய்ப்பாக ஆகட்டும். உனது அர்ப்பணம் முழுமையடையட்டும், உனது பக்தி தீவிரமடையட்டும், உனது ஆர்வம் உயர்ந்தோங்கட்டும். – ஸ்ரீ அன்னை
August 14, 2021
ஸ்ரீ அரவிந்தர்

அகங்காரம்

அகங்காரத்தின் ஆரவாரத்திலிருந்து அகன்று உனது ஆன்மாவைத் தூய்மையாக்கு. அப்போது தான் கரிய இரவிலே ஒளி தோன்றி உன் முன்னே நடைபோடும். புயலும் உனக்கு உதவி செய்வதாகவே அமையும். வென்றடைய வேண்டிய மகத்துவத்தின் உயரத்திலே உனது வெற்றிக் […]
August 13, 2021
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள் – வடிவங்கள்

புதிய கருத்துக்களை வெளிப்படுத்த புதிய சொற்கள் தேவையாவதுபோல் புதிய சக்திகளை வெளிப்படுத்த புதிய வடிவங்கள் தேவை. – ஸ்ரீ அன்னை