January 31, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஆன்மீக வாழ்வு

தனது அந்தராத்மாவைக் கண்டுகொண்டவனே ஆன்மீக வாழ்வு வாழ்கிறவன், அவன் ஆன்மஞானி – ஸ்ரீ அரவிந்தர்
January 30, 2022
ஸ்ரீ அன்னை

பலவீனங்கள்

நம் எல்லாவித பலவீனங்களும், பிடிவாதமான அறியாமைகளும், முடிகிற ஆண்டுடன் விலகி மறைந்துவிடும் என்று ஆண்டின் கடைசி நாளான இன்று உறுதி எடுத்துக் கொள்வோம். – ஸ்ரீ அன்னை
January 29, 2022
ஸ்ரீ அன்னை

அர்ப்பணிப்பது

நம் வாழ்வை மட்டுமின்றி, நம் சாவையும், நம் மகிழ்ச்சியை மட்டுமின்றி, நம் வேதனையையும் அர்ப்பணிப்பது எப்படியென்று நாம அறிந்து கொள்ள வேண்டும். – ஸ்ரீ அன்னை
January 28, 2022
ஸ்ரீ அன்னை

புத்தாண்டு

முந்தைய ஆண்டே, வணக்கம். உன்னை வழியனுப்புகிறோம். புத்தாண்டே, உனக்கு நல்வரவு. – ஸ்ரீ அன்னை
January 27, 2022
ஸ்ரீ அன்னை

யாவும் சீராகும்

இறையுணர்வு உனக்குள்ளும், உன் மூலமாகவும் வேலை செய்யட்டும். அப்போது யாவும் சீராகும். – ஸ்ரீ அன்னை
January 26, 2022
ஸ்ரீ அன்னை

அமைதி

விஷயங்கள் கடினமாகும் போதெல்லாம், நாம் அமைதியாகவும், மௌனமாகவும் இருக்கவேண்டும் – ஸ்ரீ அன்னை
January 25, 2022
ஸ்ரீ அரவிந்தர்

வன்முறை

எல்லா வன்முறையையும் அமைதிப்படுத்து. நின் தெய்வீக அன்பு மட்டுமே ஆட்சி செலுத்தட்டும். – ஸ்ரீ அன்னை
January 24, 2022
ஸ்ரீ அன்னை

வேலை

வேலையில் பூரணத்துவமே குறிக்கோளாக வேண்டும். ஆனால் அதை மிகப் பொறுமையுடன் கூடிய முயற்சியினால்தான் அடையமுடியும். – ஸ்ரீ அன்னை
January 23, 2022
ஸ்ரீ அன்னை

விழித்தெழு

வாழ்க்கை என்பது இரவின் இருளில் செய்யும் பயணம் ஆகும். உள் ஒளிக்கு விழித்தெழு. – ஸ்ரீ அன்னை