August 8, 2023

சிந்தனைப் பொறிகள்

இறைவனின் சிரிப்பு சிலசமயங்களில் மிகவும் நயமற்றதாகவும், பண்பட்ட செவிகள் கேட்பதற்குத் தகுதியற்றதாகவும் இருக்கின்றது. நயமிகு நகைச் சுவை எழுத்தாளனாகிய மோலியராக இருப்பதுடன் இறைவன் திருப்தியடைவதில்லை, கோமாளித்தன மான கேலிப் படைப்புகளை அளித்த அரிஸ்டாப னீஸாகவும் ராபலேயாகவும் […]
August 7, 2023

சிந்தனைப் பொறிகள்

கடவுட் பற்றுள்ள சிவர் பேசுவதைக் கேட்டால், கடவுள் ஒருபோதும் சிரிப்பதில்லை என்பதுபோற் தோன்றும். ஆனால், தகைச்சுவைக் கவிஞன் அரிஸ் டாபனீசின் தெய்விக வடிவமாகக் கடவுளைக் கண்ட ஜெர்மானிய எழுத்தாளர் ஹயினி, கடவு ளைச் சரியாகக் கண்டார் […]
August 5, 2023

சிந்தனைப் பொறிகள்

இறைவன் எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்டவனாதலின், மெய்மை ஒருபோதும் ஓய்வுற் றிருப்பதில்லை; அதேகாரணத்தால், பிழையின் பிள் ளைகள் இருப்பதிலும் நியாயமுண்டு. – ஸ்ரீ அரவிந்தர்
August 4, 2023

சிந்தனைப் பொறிகள்

அறிவு நம்முன் புத்தம் புதியதாக இருக்கும் போது, அது வெல்லற்கரியதாகும்; அது பழமையுறும் போது தன் சிறப்பை இழந்துவிடுகிறது. ஏனெனில் இறைவன் எப்போதும் முன்சென்றுகொண்டே இருக்கிறான். – ஸ்ரீ அரவிந்தர்
August 3, 2023

சிந்தனைப் பொறிகள்

மேதமை ஓர் ஒழுங்கமைப்பைக் கண்டுபிடிக்கி றது; சாதாரணத் திறன் அதை மாறாத கோட்பா டாக்கி, புதியதொரு மேதமை அதைத் தகர்க்கும் வரை பயன்படுத்துகிறது. அனுபவத்தில்முதிர்ந்த தளபதிக ளைப் படைத் தலைவர்களாக்குவது ஆபத்துக்குரிய தாகும்; ஏனெனில் எதிர்த் […]
August 2, 2023

சிந்தனைப் பொறிகள்

தன்னுடைய விஞ்ஞான, நடைமுறை அழுங்க மைப்பிலும் திறமையிலும் ஐரோப்பா இறுமாப் டைகிறான். அவளுடைய ஒழுங்கமைப்பு முழுமை யடையக் காத்திருக்கிறேன்; அப்போது ஒரு குழந்தை அவளை அழிக்கும். – ஸ்ரீ அரவிந்தர்
August 1, 2023

சிந்தனைப் பொறிகள்

ஒழுங்கமைப்பது தேவையே; ஆனால் வொழுங்கமைப்பை உருவாக்கிக் கடைப்பிடிக்கும் அங் போதும், அமைப்புகளெல்லாம் தம் இயல்பில் நிலையற்றவை, அரைகுறையானவை என்னும் உண்மையை நாம் எப்போதும் உறுதியாக நினை விற்கொள்ள வேண்டும். – ஸ்ரீ அரவிந்தர்
July 31, 2023

சிந்தனைப் பொறிகள்

நடைமுறை அறிவு வேறுவிதமானது; அது உண்மையானது, பயனுள்ளது, ஆனால் ஒருபோதும் முழுமையானதாக இருப்பதில்லை. எனவே அதை வகைப்படுத்தி ஒழுங்கமைப்பது தேவையாகிறது, ஆனால் அவ்வாறு செய்வது அழிவுக்கு வழிவகும். – ஸ்ரீ அரவிந்தர்
July 30, 2023

சிந்தனைப் பொறிகள்

ஞானம் நம்முன் அடியெடுத்து வைக்கும்போது அவள் அளிக்கும் முதற்பாடம் இதுவே: “அறிவென் பது ஏதுமில்லை; வரம்பற்ற இறைவனைச் சுட்டிக் காட்டும் குறிப்புகள் மட்டுமே உண்டு.” – ஸ்ரீ அரவிந்தர்