October 23, 2021
ஸ்ரீ அரவிந்தர்

நிறைவு தரும் அன்பு

தெய்வத்திடமிருந்து வருவதை மேன்மேலும் ஏற்று, தெய்வத்துடன் ஒன்றியிருக்க முற்படும் வகையில், தெய்வத்தின்பால் செலுத்தப்படும் உணர்ச்சி, ஒருவித அன்பாகும். அத்தகைய உணர்ச்சி, தெய்வத்திடமிருந்து வருவதைப் பிறருக்கு, எந்த எதிர்பார்ப்பும் இன்றிச் செலுத்தும் தன்மை உடையதாகும். அப்படிப்பட்ட உணர்ச்சியைப் […]
October 22, 2021
ஸ்ரீ அன்னை

ஆன்மா

உனது ஆன்மா என்னுடைய ஒரு பகுதி, நாம் ஒருவரையொருவர் நன்கு அறிவோம். உனக்கும் தீய சக்திகளை எப்படித் தவிர்ப்பது எனத்தெரியும், உன்னுடைய இலட்சியத்தை அடைவதற்கு போதுமான அறிவும் உனக்கு இருக்கிறது. – ஸ்ரீ அன்னை
October 21, 2021
ஸ்ரீ அரவிந்தர்

இன்பம் – வலி

இன்பம் வலியாக அல்லது வலி இன்பமாக மாறும், ஏனெனில் அவற்றின் இரகசிய யதார்த்தத்தில் அவை உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளில் வித்தியாசமாக உருமாற்றம் செய்யப்படுகின்றன. – ஸ்ரீ அரவிந்தர்
October 20, 2021
ஸ்ரீ அரவிந்தர்

முயற்சி

உன் எல்லா முயற்சிகளிலும் – அவை பகுத்தறிவு சம்பந்தப்பட்டவையோ அல்லது செயலாற்றும் முயற்சிகளோ – நீ பின்பற்றவேண்டிய இலட்சியமாவது; *நினைவுகூர்ந்து அர்ப்பணி*. நீ செய்வதையெல்லாம் இறைவனுக்கு அளிக்கும் காணிக்கையாகச் செய். இது உனக்கு மிகச்சிறந்த ஒழுக்கமுறையாகவும் […]
October 19, 2021
ஸ்ரீ அன்னை

வெற்றி

உன்னுடைய முன்னேற்றத்திற்கும், நீ செய்யும் வேலைகளுக்கும் உனக்கு ஆதரவாக என்னுடைய உதவி எப்பொழுதும் இருக்கிறது. இன்று உன்னால் வெற்றிகொள்ள முடியாத இடர்களை, நாளையோ அல்லது அதன் பின்னரோ வெற்றி கொள்ள முடியும். – ஸ்ரீ அன்னை
October 18, 2021
ஸ்ரீ அன்னை

நீ மட்டுமே வேண்டும்

மெய்யார்வத்துடன் நீ இறைவனிடம் “எனக்கு நீ மட்டுமே வேண்டும்” என்று சொல்வாயானால், நீ நேர்மையாக இருந்தே ஆக வேண்டிய சூழ்நிலைகளை இறைவன் உனக்கு ஏற்படுத்துவான். – ஸ்ரீ அன்னை
October 17, 2021
ஸ்ரீ அன்னை

இறை சக்தி

இறை சக்தி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக் காத்திருக்கிறது. அது எந்தப் புது வடிவங்களின் மூலமாக வெளிப்படமுடியும் என்று நாம் கண்டறிய வேண்டும் .- ஸ்ரீ அன்னை 
October 16, 2021
ஸ்ரீ அன்னை

உள்ளத்தைத் திற

இறைவனுடைய சக்திக்கு நீ மேலும் உள்ளத்தைத் திற, உன்னுடைய செயல்கள் முழு நிறைவை நோக்கி உறுதியாக முன்னேறும் – ஸ்ரீ அன்னை
October 15, 2021
ஸ்ரீ அரவிந்தர்

அறியாமை

அறியாமை எல்லாவற்றையும் ஒரு தலைகீழ் பார்வை மற்றும் குறைந்தபட்சம் ஓரளவு தவறான அனுபவத்தை நமக்கு வழங்குகிறது. – ஸ்ரீ அரவிந்தர்