தடைகள் ஒரு பொருட்டல்ல. இடையூறுகள், அவற்றை வெற்றி கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சியை உணர்வதற்காகவே தோன்றுகின்றன. முன்னே செல். நம்பிக்கையுடன் இரு. எல்லாம் சரியாகிவிடும். – ஸ்ரீ அன்னை
எல்லோருக்குமே துன்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை எதிர்கொள்ளும் முறையே வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. சிலர் புன்னகை செய்கிறார்கள். சிலர் பெரிதாக்கி விடுகிறார்கள். – ஸ்ரீ அன்னை
நேர்மையாய் இருப்பவர்க்கு என்னால் உதவி செய்ய முடியும்; இறைவனை நோக்கித் திருப்ப முடியும். ஆனால் எங்கு நேர்மையின்மை இருக்கிறதோ அங்கு என்னால் குறைந்த அளவே செயல்பட முடியும். – ஸ்ரீ அன்னை
இறை அருளும் பாதுகாப்பும் எப்போதும் உனக்கு உண்டு. உள்முக அல்லது வெளிப்புற இடையூறோ அல்லது தொந்தரவோ வரும்போது அது உன்ளை உன்னைப் பாதுகாக்கும் இறைசக்தியிடம் புகலிடம் தேடு. இதை நீ எப்போதும் நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் செய்வாய் […]