நீ செய்வதை மேலும் மேலும் செம்மையாகச் செய்ய முயற்சி செய்ய வேண்டும். நீ செய்வது எதுவாக இருந்தாலும் முன்னேற்றத்திற்கான விருப்பம் எப்போதும் இருக்க வேண்டும். – ஸ்ரீ அன்னை
எப்போதும் நம்மை முன்னேற்றம் அடையச் செய்வதற்கே இடையூறுகள் வருகின்றன. பெரிய இடையூறு என்றால் பெரிய முன்னேற்றம் இருக்கும். நம்பிக்கையுடன் இரு. துன்பத்தைத் தாங்கிக்கொள். – ஸ்ரீ அன்னை
ஆன்மீக ஆர்வம் உடையவர்களுக்கும், சாதகர்களுக்கும் வாழ்க்கையில் வருபவையெல்லாம் உண்மையை அறியவும் , அதன்படி வாழவும் உதவுவதற்கே வருகின்றன. நம்பிக்கையுடனிரு , அது ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும் . வெற்றி பெறுவாய் . அன்பும் ஆசீர்வாதமும் […]