மனிதர் அறிவென்றழைப்பது, பொய்த் தோற் றங்களைப் பகுத்தறிவால் ஆய்ந்து அனுமானித்து ஏற்றுக்கொள்வதேயாகும். ஞானமோ, திரைக்குப் பின் நோக்குகின்றதுகாட்சியைப் பெறுகின்றது. – ஸ்ரீ அரவிந்தர்
பகுத்தறிவு இறக்கும்போதுதான் ஞானம் பிறக் கின்றது என்பதை நான் தாமதித்துத்தான் அறிந் தேன்; அம்முக்திக்கு முன்னர் நான் அறிவினை மட்டுமே பெற்றிருந்தேன். – ஸ்ரீ அரவிந்தர்
விலங்குநிலையிலுள்ள நமது பரிணாமம் இது வரை வெற்றிகொள்ளாத களங்களில் நமக்கெனக் காத்திருக்கும் வரம்பற்ற உவகைகள், பூரண சக்திகள், சுயமாய்த் திகழும் அறிவின் ஒளிவீசும் பரப்புகள், நம் ஜீவனின் அகன்ற அமைதிநிலைகள் ஆகியவற் றின் கணநேர அனுபவம் […]
நான் ஒரு ஞானியல்லன், இறைவன் தன் செய லுக்கென எனக்களிக்கும் அறிவையன்றி வேறெதை யும் நானறியேன். நான் காண்பது பகுத்தறிவா மடமையா என்பதை எவ்வாறு நானறிவேன்? இல்லை யில்லை, நான் காண்பது பகுத்தறிவுமன்று, மடமை யுமன்று; […]
நான் பேசும்போது பகுத்தறிவு, “நான் இதைச் சொல்வேன்” என்கிறது; ஆனால் இறைவனோ அச் சொல்லை என் நாவிலிருந்து பறித்துவிட, பகுத்த றிவை நடுங்கச் செய்யும் வேறெதையோ என் உதடுகள் சொல்கின்றன. – ஸ்ரீ அரவிந்தர்
விரிந்தகன்ற, நித்திய அறிவிலிருந்து துள்ளிப் பாய்ந்து வரும் ஒளிமிகு மெல்லிய நதியே ஞான வொளியாகும். பகுத்தறிவு புலனறிவுக்கு எவ்வளவு அப்பாற்பட்டதோ, அதைவிடவும் முழுமையாக ஞானவொளி பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாகும். – ஸ்ரீ அரவிந்தர்
ஒன்றோடொன்று தொடர்புகொண்ட அறிவு, ஞானம் என்னும் இரு சக்திகள் மனிதனுள் உள்ளன. உருக்குலைவிக்கும் இடைப்பொருளினூடே தெரி கின்ற மெய்மையில் சிறிதளவை மனம் துழாவித் தேடி அடைவதை அறிவு என்கிறோம். தெய்விகப் பார்வையுடைய கண் ஆத்மனில் காண்பது […]