இறைவனின் அருள் என்றுமே நம்மை கைவிடாமல் காத்துக் கொண்டிருக்கும். இதனை, மனதில் உறுதியுடன் நம்புங்கள். அவர் ஒருபோதும் நம்மை கைவிடாமல் இருக்க இந்த நம்பிக்கை ஒன்றே போதும். – ஸ்ரீ அன்னை
தவம் என்பது வேறு எதுவும் இல்லை. இறைவன் நமக்கு என்ன கட்டளைகள் விதித்திருக்கிறானோ அவற்றை நிறைவேற்றுவதே. ஆழ்ந்த அன்பு யாரிடம் உள்ளதோ அவர்கள் தவத்தை நிறைவேற்றி : விட்டதாக அர்த்தம். நீங்கள் இறைவனிடமிருந்து பலவற்றை எதிர்பார்க்கிறீர்கள். […]
வாழ்க்கை நிம்மதியாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்க வேண்டுமெனில் பணம், பொருள் என்பது தேவையே இல்லை. அது பயனற்றது. எவ்வித பற்றும் இன்றி இறைவனிடம் தூய பக்தியை மட்டும் கொண்டிருந்தாலே போதும். உலகில் அதைவிட நிம்மதியும், மகிழ்ச்சியும் தருவது […]
இறைவனுக்கு வெளியே எல்லாமே பொய்மையானவை; மாயையானவை. எல்லாமே துக்கமான இருண்மைதான். இறைவனில் மட்டுமே உயிர், ஒளி மற்றும் மகிழ்ச்சியே உள்ளது. இறைவனில்தான் உன்னத அமைதி உள்ளது: – ஸ்ரீ அன்னை
இறைவனில் இறைவனால் எல்லாமே மாற்றியமைக்கப்படுகின்றன; மேன்மைப்படுத்தப் படுகின்றன. எல்லாப் புதிர்களுக்கும், எல்லாச் சக்திகளுக்கும் திறவுகோல் இறைவனிடமே உள்ளது. – ஸ்ரீ அன்னை