உன்னுடைய ஜாதகத்தை காட்டிலும் பிரபுவை வலியவராக இருக்க விடக் கூடாதா? பரம பிரபுவை பொறுத்தமட்டில் மாற்ற முடியாத ஜாதகம் என்பதே இல்லை. பிரபுவின் தயையில் நம்பிக்கை கொள். அனைத்தும் மாறும்! – ஸ்ரீ அன்னை
நீ செய்யும் வேலை, தனிப்பட்ட செயல்பாடுகள், மற்றவர்களுடனான உறவு என அனைத்தையும் இறைவனுக்கு நிவேதித்தாயானால் உன் வாழ்வனைத்தும் யோகமாக மாறிவிடும். – ஸ்ரீ அன்னை
ஒவ்வொரு மனிதனிடமும், விலங்கினத்தின் குணம் பதுங்கி இருக்கிறது. அது தன்னை வெளிப்படுத்த, கவனக்குறைவான தருணத்தை எதிர்பார்க்கிறது. இடையறா விழிப்பு நிலையே இதற்கு மருந்தாகும். – ஸ்ரீ அன்னை