August 21, 2022
ஸ்ரீ அன்னை

செயல்கள்

இறைவனுக்காக இறைவனுடன் செய்யப்பட்ட செயல்கள் மாத்திரமே விளைவுகளின் பிடியில் இருந்து விடுவிக்கப் பெறும். – ஸ்ரீ அன்னை
August 20, 2022
ஸ்ரீ அன்னை

சுதந்திரம் உண்டு

அவரவர் விருப்பதற்கிணங்க செயல்பட ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உண்டு. ஆனால் அவரவர் செயல்களுக்குத் தக்க இயல்பான விளைவுகளை அவர்களால் தடுக்க இயலாது. – ஸ்ரீ அன்னை
August 19, 2022
ஸ்ரீ அன்னை

தீமை

வேண்டும் என்றே நீங்கள் செய்த ஒரு தீமை எப்போதும் ஏதோ ஒரு வடிவில் உங்களிடமே திரும்பி வரும். – ஸ்ரீ அன்னை
August 18, 2022
ஸ்ரீ அன்னை

அவரவர்க்குள்

எல்லாத் தடைகளும் அவரவர்க்குள்ளேயே ; எல்லா இடையூறுகளும் அவரவர்க்குள்ளேயே; எல்லா இருண்மையும் அறியாமையும் அவரவர்க்குள்ளேயே உள்ளன.
August 17, 2022
ஸ்ரீ அன்னை

அப்புற வெளிப்பாடு

வாழ்க்கைச் சூழ்நிலைகள் பற்றிக் குறை சொல்வது எப்போதும் தவறானது ஆகும். ஏனெனில் நாம் எவ்வாறு இருக்கின்றோமோ அதன் வெளிப்பாடே அப்புற வெளிப்பாடு ஆகும்.
August 16, 2022
ஸ்ரீ அன்னை

காரணகர்த்தா

அவரவர் துன்பங்களுக்கு அவரவரே காரணகர்த்தாக்கள் ஆவர். – ஸ்ரீ அன்னை
August 15, 2022

Sri Aurobindo’s 150th Birth Anniversary

Sri Aurobindo’s 150th Birth Anniversary
August 14, 2022
ஸ்ரீ அன்னை

சூழ்நிலைகள்

சூழ்நிலைகள் என்பது கடந்தகாலச் செயல்களின் விளைவே. ஒவ்வொருவரும் அவராகவே உள்முகமாகவோ வெளிப்படையாகவோ ஏற் படுத்திக் கொண்ட சூழ்நிலைகளைத்தான் வாழ்வில் சந்திக்கிறார்கள் என்பதற்காக அனுதாபப்படுகிறேன். இதை உறுதியாக நம்புகிறேன். – ஸ்ரீ அன்னை
August 11, 2022

முரண்பாடுகள்

மேற்போக்கான முரண்பாடுகளைப் பெரிதாக எடுத்துக் கெள்ள வேண்டாம். அவற்றின் பின்னால் கண்டறியப்பட வேண்டிய உண்மை இருக்கிறது. – ஸ்ரீ அன்னை