Words of Mother

December 9, 2024

அன்னையின் மந்திரங்கள்

இதயத்தில் ஏகாக்கிரம் செய். அதற்குள் நுழை; உள்ளுக் குள்ளே ஆழ்ந்து எவ்வளவு தூரம் செல்லமுடியுமோ அவ்வளவு தூரம் செல். புறத்தே சிதறிக்கிடக்கும் உனது உணர்வின் சாடுகளையெல்லாம் ஒன்றுசேர்த்துச் சுருட்டி உள்ளத்தில் ஆழ்த்தி அமிழ்த்திவிடு. உனது இதயத்தின் […]
December 6, 2024

அன்னையின் மந்திரங்கள்

கேள்வி: நாம் முன்னர் சந்தித்திருக்கிறோம் என்பது எப்படி? அன்னை: நாம் எல்லோரும் முற்பிறவியில் சந்தித்தி ருக்கிறோம். இல்லாவிடில் நாம் இப்பிறவியில் ஒன்று சேர்ந்திருக்கமாட்டோம். நாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். காலங்காலமாக இறைவனின் வெற் றிக்காகவும், இப்புவியில் […]
July 27, 2024

அன்னையின் மந்திரங்கள்

இடையறாது மாறிக்கொண்டே இருக்கிற தோற்றங்களைப் பாராமல் எங்கும் எதிலும் உள்ள இறைவனின் நிலையான ஒருமையையே தியானம் செய். – ஸ்ரீ அன்னை
July 26, 2024

அன்னையின் மந்திரங்கள்

இறைவனின் மகிமை இந்தப் பூமியில் வெளிப்பட அவனுடைய தீரமிக்க மாவீரர்களாய் இருக்க நாம் ஆர்வமுறுகிறோம். – ஸ்ரீ அன்னை
July 25, 2024

அன்னையின் மந்திரங்கள்

எது ஈடேற வேண்டுமோ அது ஈடேறியபின்னரே, பூரண ஐக்கியத்தின் மகிழ்ச்சி கிட்டும். – ஸ்ரீ அன்னை
July 24, 2024

அன்னையின் மந்திரங்கள்

தர்க்கம் செய்யாத கவலையில்லாத குழந்தையைப் போல அவன் சித்தமே நிறைவேறட்டும் என்று இரு. இறைவனிடம் உன்னை ஒப்படைத்துவிடு. – ஸ்ரீ அன்னை
July 23, 2024

அன்னையின் மந்திரங்கள்

மிகப் பரிபூரணமான சாந்தியிலும், தெளிவிலும், சமநிலையிலும் யாவும் இறைவனேயாகவும், இறைவனே யாவுமாகவும் உணரப்படுகிறது. – ஸ்ரீ அன்னை
July 22, 2024

அன்னையின் மந்திரங்கள்

இப்புவியின் மீது ஒரு புத்தொளி பாயும். புதியதோர் உலகம் பிறந்திடும். வாக்களிக்கப்பட்ட அனைத்தும் நிறைவேறும். – ஸ்ரீ அன்னை
July 21, 2024

அன்னையின் மந்திரங்கள்

மனிதர்கள் சொல்லும் எல்லாவற்றையும் நம்பிவிடாதே. ஆனால் உன்னைவிட அதிகம் அறிந்த ஞானிகளிடம் கீழ்ப்படிய வெட்கப் படாதே. – ஸ்ரீ அன்னை