October 5, 2021
ஸ்ரீ அன்னை

இறையருள்

இறையருளில் முழு நம்பிக்கை வை. இறையருள் உனக்கு எல்லா வகையிலும் உதவும். – ஸ்ரீ அன்னை
October 4, 2021
ஸ்ரீ அன்னை

ஆசிகள்

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விநாடியிலும் என் ஆசிகள் உனக்கு உண்டு. – ஸ்ரீ அன்னை
October 3, 2021
ஸ்ரீ அன்னை

உண்மையான சக்தி

அசைக்க முடியாத ஒரு அமைதியில்தான் உண்மையான சக்தியைக் காண முடியும். – ஸ்ரீ அன்னை
October 2, 2021
ஸ்ரீ அன்னை

வெற்றி

அமைதியுடன் கூடிய பொறுமை வெற்றிக்கு நிச்சயமான வழி. – ஸ்ரீ அன்னை
October 1, 2021
ஸ்ரீ அன்னை

முன்னேற்றம்

நீ எப்படி இருந்தாய் என்பதைப் பற்றி கவலைப் படாதே. எப்படி இருக்க விரும்புகிறாய் என்பதை மட்டும் நினை. நீ நிச்சயமாக முன்னேறுவாய். – ஸ்ரீ அன்னை
September 30, 2021
ஸ்ரீ அன்னை

முன்னோக்கிப் பார்

பின்னோக்கிப் பார்க்காதே எப்போதும் முன்னோக்கிப் பார். நீ என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாயோ அதைப் பார் – நிச்சயமாக முன்னேறுவாய். – ஸ்ரீ அன்னை
September 29, 2021
ஸ்ரீ அன்னை

மனிதன்

இப்போதுள்ள நிலைக்கும், இனி அடைய வேண்டிய நிலைக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளவன் மனிதன். – ஸ்ரீ அன்னை
September 28, 2021
ஸ்ரீ அன்னை

உலகம்

இந்த உலகம் சச்சரவுகளாலும், துயரங்களாலும், சிரமங்களாலும் உருவாக்கப்பட்டது. இது இன்னும் மாறவில்லை. மாறுவதற்கு நெடுநாள் பிடிக்கும். இதிலிருந்து வெளியேற ஒவ்வொருவருக்கும் சாத்தியமுண்டு. இவற்றிலிருந்து மீள இறையருள் ஒன்றுதான் சிறந்த வழி. – ஸ்ரீ அன்னை
September 27, 2021
ஸ்ரீ அன்னை

தூய்மை

அதிமன வெளிப்பாட்டிற்கு தவிர்க்கமுடியாத முதல்படி தூய்மை. – ஸ்ரீ அன்னை