January 13, 2022
ஸ்ரீ அன்னை

சுகம்

இறைவன் கலப்பற்ற மகிழ்ச்சியாகவும், ஆனந்தமான சுகமாகவும் இருக்கிறான். ஆனால் இந்த சுகம் முழுமையாக இருக்கும்போதுதான் பூரணமாகிறது. – ஸ்ரீ அன்னை
January 12, 2022
ஸ்ரீ அன்னை

பக்கபலம

நமக்கு பக்கபலமாகவும், நல்லாதரவாகவும், வழிகாட்டியாகவும் உள்ள இறைவனே, என்றும் நம்மைக் கைவிடாத உறுதியான நண்பன்; உ இருளைச் சிதறடிக்கும் ஒளியாகவும், வெற்றிக்கு உறுதிகூறும் மாவீரனாகவும் இருப்பதும். – ஸ்ரீ அன்னை
January 11, 2022
ஸ்ரீ அன்னை

பரமன்

பரமன் தெய்வீக அறிவாகவும் பூரண ஒருமையாகவும் உள்ளான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் அவனை அழைப்போமாக. அப்போது நாம் அவனைத்தவிர வேறொன்றும் இல்லையாக ஆவோம். – ஸ்ரீ அன்னை
January 10, 2022
ஸ்ரீ அன்னை

இறைவன்

இறைவனுடன் இரண்டறக் கலந்திருப்பவனுக்கு எங்கும் இறைவனின் பூரண இன்பம் கிட்டும்; அது, எவ்விடத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் உடன் இருக்கும். – ஸ்ரீ அன்னை
January 9, 2022
ஸ்ரீ அரவிந்தர்

அமரத்துவம்

அமரத்துவம் என்பது என்ன? மரணத்திற்குப் பிறகு மனோமய சரீரம் கலையாதிருப்பது அமரத்துவமாகாது; ஓரளவு அது உண்மையேயாயினும் அதுவே அமரத்துவமல்ல, மரணமும் பிறவியுமில்லா ஆன்மாவின் பண்பைப் பெறுவோமானால் அதுவே அமரத்துவம். நமது உடல் அந்த ஆன்மாவின் கருவி […]
January 8, 2022
ஸ்ரீ அன்னை

உடல்

எங்கள் தலைவர் பிரானின் அன்னமய அங்கியாய் இருந்த திருமேனியே, எங்களது முடிவற்ற நன்றியுணர்வை ஏற்றருள், எங்களுக்காக எத்தனையோ செய்த, எத்தனையோ உழைத்த, போராடிய, துன்பமேற்ற, நம்பிக்கைகள் வைத்திருந்த, எங்களுக்காக எத்தனை எத்தனையோ சகித்துக்கொண்ட பொன்னுடலே, எங்களுக்காக […]
January 7, 2022
ஸ்ரீ அரவிந்தர்

வெற்றி

நிச்சயமான வெற்றி கிட்டும். இதற்குப் பல நாள், பல ஆண்டுகள், பல காலம் ஆகும். எதிரியின் பலமும் நாளுக்கு நாள் கூடியவாறே இருக்கும்.இந்தப் போர்க்காலத்தில் பதுங்கு குழியில் காவலிருக்கும் காவல்காரன் போல் உணர்வு சர்வ விழிப்புடன் […]
January 6, 2022
ஸ்ரீ அன்னை

யோகம்

யோகம் செய்வதற்கு முக்கியமாகத் தேவைப்படும் ஒன்று இறந்த காலத்தின் மீதுள்ள பற்றுதலை ஒழித்தல். இறந்த காலம் இறந்ததாகவே இருக்கட்டும். நீ அடைய வேண்டிய முன்னேற்றத்திலும், இறைவனுக்கு சரணாகதி செய்வதிலுமே கவனம் செலுத்து. என்னுடைய ஆசீர்வாதமும் உதவியும் […]
January 5, 2022
ஸ்ரீ அரவிந்தர்

உணர்வு நிலை மாற்றம்

உணர்வு நிலை மாற்றம் என்பது தேவையான ஒன்று. இது இல்லாமல் பௌதீக சித்திகளை அடைய முடியாது. ஆனால் உடல் அறியாமையின் விளைவுகளான மரணம், நோய், சிதைவு, வலி, உணர்வு நிலையின்மை ஆகியவற்றிற்கு அடிமையாகி இப்போதுள்ள நிலையிலேயே […]