September 7, 2022
ஸ்ரீ அன்னை

பணி

தான் என்னும் அகங்காரம்தான் சோர்வடைகிறது. அதை இலட்சியம் செய்ய வேண்டாம். உன்பணியை அமைதியாக செய்து கொண்டிரு. மனச்சோர்வு மறைந்து போகும். – ஸ்ரீ அன்னை
August 21, 2022
ஸ்ரீ அன்னை

செயல்கள்

இறைவனுக்காக இறைவனுடன் செய்யப்பட்ட செயல்கள் மாத்திரமே விளைவுகளின் பிடியில் இருந்து விடுவிக்கப் பெறும். – ஸ்ரீ அன்னை
March 17, 2022
ஸ்ரீ அன்னை

வேலை

மிகக் கடினமாக இருப்பினும், எது உனக்கு மிகச் சிறந்ததாகத் தெரிகிறதோ, அதையே எப்போதும் செய். – ஸ்ரீ அன்னை
January 24, 2022
ஸ்ரீ அன்னை

வேலை

வேலையில் பூரணத்துவமே குறிக்கோளாக வேண்டும். ஆனால் அதை மிகப் பொறுமையுடன் கூடிய முயற்சியினால்தான் அடையமுடியும். – ஸ்ரீ அன்னை
January 15, 2022
ஸ்ரீ அன்னை

பணி

நாம் இறைவனின் பணி செய்பவர்களாக இருக்கிறோம். செயலைத் தீர்மானிப்பதும், இன்னாருக்கு இன்ன செயல் என்று) நியமிப்பதும், செயலைத் துவக்கி, இயக்கி, நிறைவேற்றி வைப்பதும் இறைவனே. – ஸ்ரீ அன்னை
December 4, 2021
ஸ்ரீ அன்னை

புனிதமான பணி

இறைவனுக்காகப் பணியாற்றுவது எந்த சமுதாய மற்றும் குடும்பப் பணிகளைக் காட்டிலும் புனிதமானது. – ஸ்ரீ அன்னை
November 10, 2021
ஸ்ரீ அன்னை

ஊழியம்

நாம் எப்போதும் முழுமையாக இறைவன் ஒருவனுக்கே ஊழியம் செய்பவர்களாக இருக்கவேண்டும். – ஸ்ரீ அன்னை
September 8, 2021
ஸ்ரீ அன்னை

வேலை

வேலைக்கு திறமை எவ்வளவு தேவையோ, அவ்வளவுக்கு நிதான உறுதியும், ஒழுங்கும் தேவை. – ஸ்ரீ அன்னை
November 24, 2019
ஸ்ரீ அன்னை

இறைவன வேலை

பல யுகங்களின் தீவிர ஜர்வம்தான் நம்மை இங்கு இறைவனது வேலைக்கு கொண்டு வந்திருக்கிறது. – ஸ்ரீ அன்னை