இந்தப் பொழுதிலும் இன்னல் உற்றுப் போரா டியதே அவளது புற்கலன்; ஏற்ற அவளின் மானிட இயல்பும் பாதி இறைமைப் பாங்காய் இருந்தது: அனைவரில் இருக்கும் புனித ஆன்மா அவளின் அகத்துரு வாகத் தெரிந்தது, இயற்கை ஆற்றல் எல்லாம் அவளின் அகத்ததன் பண்பாய் உரிமை ஆனதே.
புற்கலன் – புற உடல்
– ஸ்ரீ அரவிந்தர்