October 21, 2022

சாவித்ரி

கவனமே காட்டாப் பேரண்டத் தாயினொரு கன்னம் தொட்டதொரு சின்னச் சிசுவிரல் இனிசெய எதிருள முடிவிலாப் பணிகளை எண்ணிப் பார்க்க இயைத்தது போன்றே, மிகச்சிறு பிள்ளையின் வேணவா ஒன்று இருளடர் பெருவெளியை இறுகப் பிடித்தது. – ஸ்ரீ […]
October 20, 2022

சாவித்ரி

உருவுறா உணர்வுத் தொகுதி ஒன்று வெளிச்சம் காண விரும்பிய பொழுது வெறுமை கொண்டமுன் வித்தகம் ஒன்று வெகுதூர மாற்றம் வேண்டியேங் கியது. – ஸ்ரீ அரவிந்தர்
October 19, 2022

சாவித்ரி

எங்கே உளதென இயம்பொணா ஆழத்து வெறுமைப் பள்ளத்தே விற்றது போலவும், கடைமுடி(வு) என்கிற இந்தக் கரைதலின் உழைப்பும் உள்மையம் தனிலே உறைந்தது போலவும், அழிந்து பட்டுப் புதைந்து போகிய கடந்த கால வாழ்வினை மீட்க முனைந்த […]
October 18, 2022

சாவித்ரி

வருகை தந்ததொரு வலியின் துடிப்பு பதறுமொறு தடயம் பதித்த(து) அன்றியும், தேடிக் களைத்துப் போன பழையதும் தேடிய(து) உறாது திருப்தி கொளாததும் ஆனதோர் அவாவினுக்(கு) இடமீந்(து) அகன்றது, அதனின் அகநிலைச் சிறப்புப் பண்பினைத் தேடிடும் ஒருவன் […]
October 17, 2022

சாவித்ரி

கூர்ந்தாயக் கூடா இருளடர் பரப்பினில், அதன்பின், ஏதோவொன்(று) அதிர்வு கொண்டது, பெயரிடப் படாத இயக்கம் ஒன்றோ, எண்ணவே இராத இளங்கருத்(து) ஒன்றோ, விடாப்பிடி யுடனே வேண்டுகிற ஒன்றோ, மனநிறை (வு) இன்றியே மருகிடும் ஒன்றோ, செயல்நோக்(கு) […]
October 16, 2022

சாவித்ரி

எண்ணமோ உயிர்ப்போ ஏதும் இன்றி வடிவே இல்லா மந்த நிலையினில், உயிர்க்கூ(டு) ஒடுங்கிச் சூழல் உணர்விடம் ஓய்வுற்(று) ஒதுங்கி, வெறுமை பரவிய மாபெரும் வான்வெளிப் பக்கம் சாய்ந்தும், உயிர்த்துடிப்(பு) அற்ற வெறும்பாழ் உற்றும், சிந்தனை சேராக் […]
October 15, 2022

சாவித்ரி

முதலில் தொடங்கி முடிவினில் முடியும் இன்மை என்னும் இயல்பின் இடையே எல்லை இல்லாத் தன்மை கொண்டு வீழ்ச்சி உற்ற ஆன்மா வினதோர் அரிய ஆற்றல் விழித்தெழுந் ததுவே, உருதான் எடுத்த இருட் கருவறையை ஒருமுறை மீட்டும் […]
October 14, 2022

சாவித்ரி

அவன்தன் நோக்கிலா ஆற்றல் அளந்த தெளிவிலாச் சின்னத்(து) உருவிலா முடிவிலிதன் ஊடுசெல முடியா ஒளியும் நுழையா அதலக் குழும்பினை அனைவரும் உணர்ந்தராம், ஆழம் அறிய ஒண்ணாச் சூன்யமும் அவனி எங்கனும் அமர்வு கொண்டதே. – ஸ்ரீ […]
October 13, 2022

சாவித்ரி

உலகு புரக்கும் உயர்நிலை இறையவர் விழித்தெழ இருக்கும் மேன்மைப் பொழுது. தெய்வத் திருவிளை யாடலின் வழியில் தீமை சேருமோ என்றமுன் உணர்வுடன் அகமெலாம் அறியாமை பரவிய இருள்மகள், விளக்கும் ஏற்றா வெறுமைச் சூழலில் அவளின் நிலைபேற்(று) […]