Savitri

November 18, 2023
ஸ்ரீ அரவிந்தர்

சாவித்ரி

சிந்தையைத் தூண்டும் செறிவுடை ஆந்தல் திரும்பவும் திரும்பப் பெற்றிடப் பட்டது. உவகையைத் தந்திடும் ஊதியம் எதுககும் பெறாத வினைஞன் பிழைப்பைப் போன்று வாழ்வியல் தன்னின் ஊழியக் காரர் தன்விருப்(பு) ஆர்ந்ததாய் தன்மையை – ஸ்ரீ அரவிந்தர்
February 16, 2023
Sri Aurobindo and The Mother

சாவித்ரி

ஒப்பிலாத் தன்மையோ(டு) உற்ற நித்தியப் பேறு தந்த பின்னணிச் சூழலில் அவளின் தனியியல் அமைதியால் அவளது மானிடப் பொழுதும் மகோன்னதம் ஆனது.  
February 12, 2023

சாவித்ரி

அவள(து) மெய்ம்மை அடைந்த உயர்த்திக்(கு) அவளும் இணையாய் வளர்ந்திருந் தனளே, மீபெரும் அமைதிக் களங்களின் மேதைமை அதனின் அகன்று பரவிய தனிமையில் ஆன்மா முழுதையும் அளாவி நனைத்தும், வேடம் களைந்த அவளின் மெய்யுரு உள்ளார் தன்மையை […]
February 11, 2023
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

கண்ணைப் பறித்திடும் வண்ண வகையில் மாறுபா(டு) இல்லா மரகதப் பசுமைதன் ஒப்பனை செய்த ஒழுங்கிலே பரிதியின் கதிர்களைப் போர்த்திடக் களிகிளர் மலர்கள் பின்னல் இட்டிடும் பின்னணி உயிரியம், எவர்தம் நோக்கிலும் எட்டிடா விதமாய்’ அவளின் ஊழ்க்கூ(று) […]
February 10, 2023
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

மண்ணகப் பற்றினை மனதிலும் நினையா வானார் குன்றுகள் வாகாய் அவளைச் சுற்றிலும் சூழ்ந்து துடிப்பாய் நின்றும். அகன்ற ஆழச் சிந்தனை கொண்டே பசுந்தழை விரித்துப் படர்ந்துதான் அடர்ந்துள அடர்கான் பகுதி அறிவிப்(பு) உரைக்கவும், முகத்திரை அணிந்துவாய் […]
February 8, 2023
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

அரவம் அற்றதும் அச்சம் தருவதும் ஆனதோர் அமைதிப் பந்தயக் களத்தில், எந்த உலகுக்(கு) எழுந்துநின் றாளோ, அந்த உலகம் அறியா(து) இருந்திடும் வண்ணமாய் வந்தாள், போரிடும் பொருட்டே, தன்னுளே வதியும் அருந்திறம் தவிர உதவியாள் ஒருவரும் […]
February 7, 2023
ஸ்ரீ அரவிந்தர்

சாவித்ரி

கனிவுடன் பாசம் காட்டும் பலப்பல முகங்களின் இடையே முற்றும் தனியளாய், எதனைக் குறித்தும் ஏதும் அறியா(து) இதஞ்சூழ் நெஞ்சினர் இடையுள(து) அறிந்தளாய், மனித வாடையே அற்றுக் கிடந்த தனித்த தரிசுக் காட்டு வனப்பினில், வருமென முன்னரே […]
February 6, 2023
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

கவசம் தாங்கிய காலாட் படையின் அணிவகுப்(பு) அதனின் இறுதியை நோக்கி கனக்கும் சுமையுடன் கடுமிதி நடையுடன் கடந்த காலம் நெடிதாய்த் தோன்றினும், இறுதியை அருகாய் எட்டிடும் போழ்தினில் மிகவும் விரைவிலே சேர்ந்ததாய்த் தெரிந்தது. – ஸ்ரீ […]
February 5, 2023
ஸ்ரீ அரவிந்தர்

சாவித்ரி

ஏனெனில் இதுவரை உதித்திரா மெய்ம்மையின் காலக் கணிப்பிலா ஆற்றவே, அந்தக் கடவுள் பிறப்பினில் சுமத்திய நுகத்தடிச் சுமையை இறக்கிடக் கூடும். – ஸ்ரீ அரவிந்தர்