நாம் தவறு செய்து விடுவோமோ என்று ஒருவர் தன்னையே நொந்து கொள்ளத் தேவையில்லை. தன்னுடைய இறைவேட்கையில் முழு நேர்மையும் ஒருவர் வைத்திருந்தால் கடைசியில் எல்லாம் சரியாகிவிடும். – ஸ்ரீ அன்னை
உண்மையை எட்டமுடியாது. எண்ணங்கள் அற்ற மௌன நிலையில் அதன் தரிசனம் கிட்டும். நிரந்தரப் பெரு வெளியின் அமைத் துலங்கும் ஒளியில் தான் உண்மை உறைகிறது. வாதப்பிரதிவாதங்களின் ஆரவாரத்தினிடையே உண்மை தலை காட்டுவதில்லை. – ஸ்ரீ அரவிந்தர்
நீ மனங் கலங்கியது தவறு ; உன் மனத்திலும் இதயத்திலும் சந்தேகம் இருந்ததை இது காட்டுகிறது . ஒருவன் பரிபூரணமாகத் தூய்மையாக இருந்தால் அவனுக்கு எவ்வித சந்தேகமும் உண்டாகாது . மனத்தினால் உண்மையை அறியமுடியாது ; […]