இரவிலே மோதிடும் அரக்கர் வடிவுடை மல்லரைப் போன்றராம் தொன்மை வாதிகள் நிலமும் நேசமும் தண்டனைத் தீர்ப்புமாய் வட்ட வடிவிலே சூழ்ந்த வண்ணம் அனைவரும் அவளிடம் திரும்பி வந்தனர், மனம்சொலும் சான்றினை ஏற்க மறுத்திடும் இயப்பரும் கொடிய இனைவினைப் பொறுக்கவும் மடந்தை பெற்ற மங்கிய இறைமைகள் வீரமாய்ப் பொருதவும் விழித்தெழுந் தனவே, சுடர்வதாம் அவளுடை இதய நிழலில் இடர்தர வல்லதாய் எழுந்தசொற் போரின் சோர்வினைத் தந்திடும் தோற்றுவாய் தனிலே, நிலவுல கத்தின் நெடிதாய்த் தொடர்ந்த மரபுரிமை யான மரண வலியினைச் சுமந்தத னாலே சோகக் கல்லென மோன அமைதியை முற்றுமாய்க் கொண்டே ஆறுதல் பெற்றிடா ஆழ்கெவி தன்னின் பாதுகாப் பாளன் ஒருவனின் கண்கள் கருத்துடன் காணா வண்ணம் நிலைத்து விண்வெளி தன்னை வெறித்து நோக்கக் கால வரம்பிலாத் துயரம் கண்டும், காணக் கண்டில வாழ்வின் இலக்கே.
– ஸ்ரீ அரவிந்தர்