நெடிதாய்த் தன்னின் நீள்சிற(கு) அடிக்கிற ஆற்றல் வாய்ந்த அவளின் ஆன்மா, அவளின் புற்கலத்(து) அரவம் இன்றி அழைப்பு விடுத்த ஆணையி னாலே, செறிதுயில் என்னும் திரைகடல் கொண்ட அலையின் எழுச்சியை அடக்குதல் ஊடே, நொதுமல் தன்மைய இடுகுறிக் கனவுக் காட்சிகள் வாயிலாய்க் கவினொளி ஊட்டி. மாளும் கொடுமை வாய்ந்த நாட்களின் அயரா அருமை முயற்சியை மற்றும் அழுத்தம் விளைக்கும் வருத்தம் தன்னைத் திரும்பி நோக்கித் தெரியா நிலையுடன் நுகரூழ் இணைந்த நுகத்தடி சேரப் பறந்து பின்னே பயணித் ததுவே.
– ஸ்ரீ அரவிந்தர்