அந்த வேளையில் மந்தமாய் ஆங்கோர் நெஞ்சுரம் இலாத நினைவு மலரோ நிழற்படி(வு) ஆக நிலைபெயர்ந்(து) அசைய, தெடுமூச்(சு) எறிந்தவள் நெஞ்சைப் பற்றினாள், தனக்கு நெருங்கியும், தயங்கி நிற்பதும், ஆழத்தும், அடங்கியும், பழகிப் போனதாய்த் தங்கிட அவ்விடம் தக்கத(து) ஆனதாய் இருந்த வலியினை இனங்கண்டு கொண்டாள் ஏனோ அங்கது இருந்தது என்பதும் எங்கே இருந்து வந்தது என்பதும் அவளுக்(கு) ஆனால் தெரிய வில்லையே
– ஸ்ரீ அரவிந்தர்